Wednesday 1 November 2017

வங்கடை (Horse Mackeral)

பாரை (Jack), சூரை (Tuna) என்ற இருவேறு மீன் குடும்பங்களுக்கு இடையே ஓர் இணைப்புப் பாலம் போல விளங்கும் மீன் வங்கடை. கடலில் பாரை மீன்களுடன் சேர்ந்து வங்கடையும் திரியும். அதனால் ‘வங்கடைப் பாரை‘ என்றும் இந்த மீன் அழைக்கப் பெறும். வங்கடைக்கு Torpedo Scad. Hard tail Scad என்ற பெயர்களும் உள்ளன.
ஆங்கிலத்தில்ஹார்ஸ் மேக்கரல் (Horse Mackeral) என்னும் இதன் பெயர் இது சூரை குடும்பத்துக்கு உறவுக்கார மீன் என சொல்லாமல் சொல்கிறது.
திறந்த கடல்மீனான வங்கடை மிக அரிதாக பார்ப் பகுதிகளில் தட்டுப்படும். மனிதர்களால் அதிக அளவில் உண்ணப்படும் சந்தை மீன்களில் வங்கடையும் ஒன்று. ஆனால், மிகச்சிறந்த உணவு மீனாக இது கருதப்படுவதில்லை
பலவகை மீன்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு குவியலில், வங்கடை மீன் ருந்தால் அது மீன் எடுப்பவர்களின் கடைசித் தேர்வாகவே இருக்கும்.

.

செவுள்மூடியில் உள்ள கறுப்புத்திட்டும், நீண்டுவளைந்த பக்கத்தூவியும் இந்த மீனின் முதன்மை அடையாளங்கள்.
வங்கடையின் இருபக்கங்களிலும், முன்பிறமிருந்து பின்புறம் வரை Scute எனப்படும் கடினமான கூரிய செதிள் வரிசை அமைந்திருக்கும்.
இந்த முள்அணிவரிசையை மீனின் முன்புறமிருந்து நாம் வருடினால் குத்தாது. பின்புறம் இருந்து வருடினால் குத்தும். வால்புறத்தை நெருங்க நெருங்க இந்த முள்வரிசை மிகவும் முரடாக, தடிமனாக விளங்கும்.
ஆங்கிலத்தில்கடின வால் மீன்‘ (Hard tail Scad) என வங்கடைக்குப் பெயர் வர இந்த முள்அணிவரிசையே காரணம்.
இந்த முள்அணிவரிசை அடங்கிய தோலை உரித்தபின்பே வங்கடை மீனை ஒருவர் உண்ண முடியும்.
கடற்புறங்களில் அதிக குறும்பு செய்யும் சிறுவர்களை, ‘வங்கடைக்கு தோல் உரிக்கிற மாதிரி உரிச்சிருவேன்என்று அப்பாக்கள் எச்சரிப்பதுண்டு.

வங்கடை மீன் எது என்பதில் சிறு குழப்பம் உண்டு. ஒவ்வொரு வகை கடற்பகுதிகளிலும் ஒவ்வொரு வகை மீன் வங்கடை என அழைக்கப்படுவதும் உண்டு.

No comments :

Post a Comment