கண்ணாடி காரல் (Moon Fish)

கார்ச்சக்கரம் அளவுக்கு வளரக்கூடிய மீன் இது. முழுக்க
முழுக்க இந்தமீன் தட்டையான, ஏறத்தாழ வட்டவடிவம் கொண்டது. மீனின் பெரும்பகுதி வெள்ளி
நிறமாகவும், மேற்பகுதி பசியநீல நிறமாகவும் பொலியும். மேற்பகுதியில் 3 முதல் 4 கருஞ்சாம்பல்
நிற திட்டுகள் காணப்படலாம்.
சிறிய முன்துருத்திய வாயும், கவைபோல பிளந்த வாலும்
இதன் முக்கிய அடையாளங்கள்.
இவ்வளவு தட்டையான இந்த மீன், இதயம், மூளை போன்றவற்றை
எங்கே வைத்துக் கொள்கிறது என்பது புதிர்.
உலகின் முதல்வெப்ப ரத்த மீனாக கண்ணாடி காரல் அறிவியலாளர்களால்
கருதப்படுகிறது. கடலில் எவ்வளவு குளிர்நிறைந்த ஆழத்தில் மூழ்கினாலும் தனது உடலை இது
வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளும். எவ்வளவு ஆழத்தில் மூழ்கினாலும், இதன் வெப்பநிலை
5 பாகை செல்சியசாகவே இருப்பது அதிசயம்.

கண்ணாடி
காரல் கூட்டமீன் அல்ல. இது தனித்து திரியக்கூடிய அரிய மீன். இந்தியப் பெருங்கடல் போன்ற
வெப்பக்கடல்பகுதியே இதன் முதன்மை வாழ் விடம்.
உடல்வெப்பம்
காரணமாக கூரிய பார்வை கொண்ட மீன் இது. கடலின் இருள் ஆழங்களிலும் இம்மீன் தெளிவாகப்
பார்க்கக் கூடியது. கொன்றுண்ணியான கண்ணாடி காரல், பெருங்கடல்களில் நீண்ட தொலைவு நீந்தவும்
கூடியது.
No comments :
Post a Comment