கடல்பாம்பு (Yellow sea snake) (Pelamis
platurus)

தமிழக கடல்பாம்புகளில் நமக்கு மிகவும் பரிச்சயமான
பாம்புகளில் ஒன்று மஞ்சள் கடல்பாம்பு. ஒன்றரை மீட்டர் நீளத்துக்கு மேல் இது வளரக்கூடியது.
ஆண் பாம்பைவிட பெண் பாம்பே நீளம் அதிகமானது.
தட்டையான இதன் உடலின் மேற்பகுதி கறுப்பு கலந்த கருநீல
பழுப்பு நிறமாகவும், அடிப்பகுதி மஞ்சள் நிறமாகவும் காணப்படும். சற்று நீண்ட தலை , உடலில்
இருந்து
தன்னை வேறுபடுத்திக் காட்டும். துடுப்பு போன்ற தட்டையான இதன் வால்பகுதியில் மஞ்சள், கறுப்புநிற பட்டைகள் காணப்படும். கடல்பாம்புகள் நீந்துவதற்கு அவற்றின் வாலே உதவுகிறது.
கடல்பாம்புகளுக்கு செதிள்கள் இருக்காது என்று ஒரு
கருத்து உண்டு. ஆனால், மஞ்சள் கடல்பாம்புக்கு சிறிய அறுகோண வடிவிலான மென்மையான செதிகள்
உண்டு. பெரிய கண்களில் இந்த வகை பாம்புக்கு கருநீல கண்மணிகள் காணப்படும்.
முழுக்க முழுக்க திறந்தகடற்பரப்புகளில் காணப்படும்
பழக்கம் கொண்டது மஞ்சள் கடல்பாம்பு. தலையைத் தூக்கியபடி இது நீந்தும். இந்தவகை பாம்பு
முன்னால் மட்டுமல்ல, பின்னாலும் நீந்த வல்லது. மஞ்சள் கடல்பாம்புக்கு மீன்களே முதன்மை
உணவு.
கடல்பரப்பின்மேல் அசையாமல் மிதந்து, தன் அடிநிழலில்
ஒதுங்க வரும் மீனை இது ஏமாற்றி இரையாக்கும். சட்டென்று பின்னால் திரும்பி இரையைப் பிடிக்கவும்,
திடுக்கிட வைக்கும் வேகத்தில் வேகமாக நீந்தவும் மஞ்சள் கடல்பாம்பால் முடியும். தனது
வண்ண உடலைக்காட்டி எதிரியை மிரட்டி இது நெருங்கவிடாமலும் செய்யும்.

(உடலில் முடிச்சுப் போட்டுக் கொண்டு அதன் வழியே உராய்ந்தபடி
இது ஊடுருவிச் சென்று கொட்டலசை அகற்றும் என்றாலும் அது தப்பில்லை) இதே முறையில் மஞ்சள்
கடல்பாம்பு தோலுரிக்கவும் செய்யும்.
கடல்மேற்பரப்பில் நீந்தும் பழக்கம் உள்ளதால் மஞ்சள்
கடல்பாம்பு அடிக்கடி வலைஞர்களின் வலையில் சிக்கிக் கொள்ளும்.
மிக கொடிய நஞ்சுள்ள இந்த கடல்பாம்பை மீனவர்கள் மிக
கவனமாக வலையில் இருந்து அகற்றி கடலில் எறிவார்கள். கடல்நீரை விட்டு மஞ்சள் கடல்பாம்பை
சற்றுநேரம் தூக்கிப்பிடித்தால் ரத்தஅழுத்தம் ஏற்பட்டு அது இறந்துவிடக்கூடியது.
கடல்பாம்புகள் அனைத்துமே நுரையீரல் மூலம் சுவாசிக்கக்
கூடியவை. மூச்சுவிட அவ்வப்போது இவை கடல்மட்டத்துக்கு மேல் வந்தே ஆகவேண்டும். மஞ்சள்
கடல்பாம்பும் இதற்கு விதிவிலக்கில்லை. கடலின் உள்ளே 3 மணிநேரம் வரை மூச்சுப்பிடிக்கக்
கூடிய இந்த பாம்பு, கடல் அமைதியாகும் போது கடல்மட்டத்துக்கு வந்து நீந்திக்களிப்பதை
விரும்பும். இதன் ஆயுளில் 87 விழுக்காடு கடல்நீருக்குள்ளேயே கழியும்.
தரையில் வாழும் நல்லபாம்பை விட மஞ்சள் கடல்பாம்பு
10 மடங்கு அதிக நஞ்சு உள்ளது. சீண்டாமல் இது கடிக்காது என்பதாலும், கடிக்கும்போது பெரும்பாலும்
நஞ்சை செலுத்தாது என்பதாலும் இது ஆபத்தற்ற கடல்பாம்பாக கருதப்படுகிறது. இரைமீன்களை
கடித்து அவற்றை மயக்கமடையச் செய்து இது உணவாக்கும்.
புயல் காற்றில் தப்பித்தவறி மஞ்சள் கடல்பாம்பு கரையொதுங்கினால்
அவ்வளவுதான். மீண்டும் அது கடல்நீருக்குள் செல்ல முடியாமல் உயிரிழக்க நேரிடும்.