அந்திப்பன்னா (Indian Threadfish)
பாரை (Jack) மீன்கள் பலவகை. அவற்றில் 33 இனங்களும் 140 வகைகளும்
உள்ளன. அந்த பாரை இன மீன்களில் ஒன்றுதான் அந்திப்பன்னா
எனப்படும் Indian Threadfish மீன். இந்த
மீனின்
பெயரில் பன்னா என்று இருப்பதையும், மாலைப்பொழுதைக் குறிக்கும் அந்தி என்ற பெயர்
இருப்பதையும் கவனித்திருப் பீர்கள்.
பாரை இன மீனாக இருந்தாலும் இந்த மீன் பன்னா என அழைக்கப்படுகிறது. Indian Threadfish மீனைப்போல Indian
Thread finfish எனப்படும் மீனும் உண்டு என்பார்கள். நாம் பின்னால் சொன்ன Indian Threadfinfish மீனுக்கு
நூல்வாலன் பா ரை என்பது பெயர்.
இந்த இரண்டு மீன்களும் ஒன்றுதான் என்பவர்களும் இருக்கிறார்கள். இல்லவே இல்லை என்பவர்களும் இருக் கிறார்கள்.
நூல்வாலன் பாரைக்கு ‘இந்திய இழைத்துடுப்பு
மீன்’ என்ற பெயரும் உண்டு.
Indian Threadfish எனப்படும் அந்திப் பன்னாவுக்கு
கண்ணாடி மீன் என்ற பெயரும் உள்ளது. Alectis Indica என்பது
இந்த மீனின் அறிவியல் பெயர். வைர வடிவிலான (Diamond
Trevally) என்றும் இந்த மீன் அழைக்கப்படுகிறது.
பாரை இன மீன்கள் அதிகாலை பொழுதிலும், அந்திசாயும் கருக்கல் வேளையிலும்தான் அதிக
சுறுசுறுப்போடு இயங்கும். எனவே, பாரை
இனத்தைச் சேர்ந்த அந்திப்பன்னாவுக்கு அந்தப்பெயர் ஏன் வந்தது என்பது இப்போது
புரிந்திருக்கும்.
(பாரை மீன்களுக்கு காலையந்தியிலும், மாலையந்தியிலும் கண்பார்வை மிக நன்றாகத் தெரியும். இரை
மீன்களை இவை எளிதாக வேட்டையாடக் கூடிய நேரம் இதுதான். எனவே தான் காலையந்தியிலும், மாலையந்தியிலும் பாரை மீன்கள் சுறுசுறுப்பாக இயங்கு கின்றன)
அந்திப் பன்னா, பாரை
குடும்பத்து மீன்களில் சற்று பெரியவகை மீன். இதன் பக்கவாட்டு
உடல் பச்சை கலந்த வெள்ளிநிறமாக ஒளிவிடும். செதிகள்கள்
இல்லாதது போலத் தோன்றினாலும் கூர்ந்து கவனித்தால் உடலில் புதைந்து பதிந்த சிறுபொடிச்
செதிள்கள் இந்த மீனுக்கு இருப்பது தெரிய வரும். இந்த
செதிள்கள் ஒளியை எதிரொளிப்பு செய்யக் கூடியவை. அதாவது பிரதி பலிக்கக்
கூடியவை.
அந்திப்பன்னாவின் முதுகுத்தூவி, அடித்தூவிகளில் நூல் போன்ற இழை நீண்டு மிதக்கும்.
வளர்ந்த மீன்களுக்கு இந்த நூலிழை இருக்காது.
இளம்வயது மீன்கள் இந்த நூலிழைகளுடன் திரிவதால் இவற்றை சொரிமீன்கள் (Box
Jellyfish) என்று நினைத்து எதிரி மீன்கள் கிட்ட
நெருங்காது.
அந்திப்பன்னாவில் இளம்மீன்களே வைரவடிவத்துடன் விளங்கும். வயது ஏறஏற மீனின் வடிவம் சற்று மாறிவிடும்.
அந்திப் பன்னாவைப் போல அச்சுஅசலாக அட்லாண்டிக் கடற்பகுதியில்
வாழும் மீன் ஒன்றும் இருக்கிறது. அந்திப் பன்னாவுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் போல இருக்கும்
அந்த மீனை ‘லுக்டவுன்’ (Lookdown) என அழைப்பார்கள். மெல்லிய தட்டையான உடல் கொண்ட
இந்த மீனும் பாரை குடும்பத்து மீன்தான். 8 முதல் 12 அங்குல நீளத்துக்கு இது
வளரக்கூடியது.
இந்த மீனுக்கு வழக்கத்துக்கு மாறாக உயர்ந்த நெற்றி உண்டு.
முகத்தின் அடிப்பகுதியில் வாய் இருக்கும். கண்கள் உயரத்தில் இருக்கும். மேல்
இருக்கும் இந்த கண்களால் கீழே பார்ப்பதால் இந்த மீனுக்கு ‘லுக்டவுன்’ (Lookdown)
என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
வெள்ளி நிறமான பக்க உடல் கொண்ட இந்த மீனின் முதுகுத்தூவி நூலிழை
வால்தூவிகளை விட சற்று நீண்டிருக்கும். இந்த மீனின் அடித்தூவி நூலிழை, முதுகுத்தூவி
நூலிழையுடன் ஒப்பிடும் போது சற்று நீளம் குறைவானது.
No comments :
Post a Comment