அறிய அரிய
துணுக்குகள்
பிகாசோ கிளாத்தி |
இந்த
புவிப்பந்தின் 72 விழுக்காடு பகுதி கடல். இந்த கடல்களில் மொத்தம் 2 லட்சத்து
முப்பதாயிரம் வகை கடலுயிர்கள் உள்ளன. உலகப் பெருங்கடல்களில் வெறும் 5 விழுக்காடு
பகுதி மட்டுமே இதுவரை ஆராயப் பட்டுள்ளது.
ஆவுளியாக்கள் சில நிமிடங்களுக்கு ஒருமுறை கடல்மட்டத்துக்கு மேலே வந்து மூச்சிழுக்கக் கூடியவை. ஆனால், கடலடியில் தொடர்ச்சியாக 20 நிமிட நேரம் ஆவுளியாவால் தங்கியிருக்க முடியும். நாள் ஒன்றுக்கு 36 கிலோ கடற்புற்களை ஆவுளியா மேயும்.
கிளாத்தி
எனப்படும் டிரிக்கர் (Trigger) மீன்களின் கண்கள் பொதுவாக தலையின் பின்புறம்
மிகவும் தள்ளி அமைந்திருக்கும். குறிப்பாக பிகாசோ கிளாத்தி (Picasso Tirgger)
மீனின் கண்கள், காதுகள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும். ஏன்? எதற்காக? முள்நிறைந்த
மூரையை (Sea Urchin) உண்ணும் போது முட்கள் கண்களில் குத்தி விடக்கூடாது என்பதற்காக
கிளாத்தியின் கண்கள் இப்படி தள்ளி அமைந்திருக்கின்றன.
வண்ணாத்தி
வகை பார்மீன்களில் ஒன்றான மூரிஸ் ஐடல் (Moorish Idol) மீன்களில் ஆண் மீனும்,
பெண்மீனும், இறக்கும் வரை இணைபிரியாமல் வாழக் கூடியவை.
மூரிஸ் ஐடல் |
உலுக்கு
எனப்படும் மின்சாரத் திருக்கை வெளியிடும் மின்சாரத்தை வைத்து 10 மின்விளக்குகளை
எரிய வைக்கலாம்.
கடமாடு
(Box Fish) மீன்களுக்கு மற்ற என்பு மீன்களுக்கு உள்ளது போல மரபார்ந்த எலும்புக்
கூடு (Skeleton) கிடையாது. இந்தவகை எலும்புச்சட்டத்துக்குப் பதிலாக கடமாடு
மீன்களுக்கு எலும்புப் பெட்டி மட்டுமே உள்ளது. கண்கள், வாய் தூவி போன்றவை அதில்
இருந்து நீட்டிக் கொண்டு இருக்கின்றன.
என்பு
மீன்களில் (bony Fish) பல இன மீன்களுக்கு மூச்சுத்துளைகள் எனப்படும் செவுள்
துளைகள் இரண்டுக்கும் அதிகமாக உள்ளன. அவற்றின் மூச்சுத்துளைகள் நம்மைப் போல
வாயுடன் இணைந்திருப்பதில்லை. அதிக மூச்சுத்துளைகள் உள்ள மீன்களால் அதிக அளவில்
மணத்தை முகர முடியும்.
நீலத்
திமிங்கிலங்கள் 188 டெசிபல் அளவுக்கு ஒலியெழுப்புகின்றன. இது தரையில் வாழும் யானை,
சிங்கம் உள்பட எந்த ஒரு விலங்காலும் எழுப்ப முடியாத அளவுக்கு அதிக ஒலி.
சுவையை
அறிய வசதியாக, கெழுது (Cat fish) இன மீன்களுக்கு ஒரு லட்சம் சுவை மொட்டுகள் (Taste
buds) உள்ளன.
கடல் பவழப்
பஞ்சு உயிரினங்களுக்கு தலை, வாய், கண்கள், எலும்பு, இதயம், நுரையீரல், மூளை என்று
எதுவும் இல்லை. இருந்தும்கூட அவை உயிர்வாழ்கின்றன.
No comments :
Post a Comment