பயிந்தி (Sickle fish)
பார்வைக்குத் திரவி மீனைப் போல, ஆனால் திரவியை விட
வட்டவடிவ உடல் கொண்டவை பயிந்தி மீன்கள். ஆங்கிலத்தில் இதை அரிவாள் மீன் என்ற பொருளில்
Sickle fish என அழைப்பார்கள்.
பயிந்தி மீன்களில் பலவகைகள் உள்ளன. பெரிய பயிந்தி
மீன்கள் ஓர் உணவுத்தட்டு அளவுக்குப் பெரியதாக இருக்கும். Drapane punctata
என்பது பயிந்தி இன மீன் ஒன்றின் அறிவியல் பெயர்.
பயிந்தி மீன்களில் புள்ளிப் பயிந்தி, வெள்ளைப் பயிந்தி போன்றவை உண்டு. ஒலைப்பயிந்தி பாசிச் செடி போல நாற்றம் அடிக்கக் கூடியது. கோட்டுப் பயிந்திகளில் வரிப்பயிந்தி, கரும்பயிந்தி போன்றவையும் உள்ளன. கரும்பயிந்தியை கொம்புப் பயிந்தி என்றும்
அழைப்பார்கள். பயிந்திகளில் திரளைப் பயிந்தியின் சதை பஞ்சு போல உண்பதற்குச் சுவையாக
இருக்கும்.
No comments :
Post a Comment