மிக நீ….ளமான உயிரினம்
Lion mane Jelly fish |
முருக பெருமான். ஔவை மூதாட்டியின் முன்னிலையில் தோன்றி,
‘உலகில் பெரியது எதுவோ? உலகில் அரியது எதுவோ‘ என்று கேட்டது போல, உங்களிடம் யாராவது,
“பெருங் கடல்களில் வாழும் உயிரினங் களில் மிக நீ…..ளமான உயிரினம் எது?“ என்று கேட்டால்
என்ன செய்வீர்கள்?
ஏதாவது ஒருவகை திமிங்கிலமாகத்தான் இருக்கும்
என்று நீங்கள் நினைக்கக் கூடும். அப்படி நினைத்தா ல் அது தவறான விடை.
உண்மையில், உலகின் மிக நீளமான கடலுயிர்,
Lion mane Jelly fish எனப்படும் ஒரு வகை சொறியினம்தான். இந்த சிங்கப் பிடரி சொறி (இழுது)
36.6 மீட்டர் நீளத்துக்கு அதாவது 120 அடி நீளத்துக்கு (!) விழுது போன்ற நீளமான உணர்விழைகளைக்
கொண்டது. மெடூசாவின் கூந்தல் போன்ற இந்த உயிரினமே கடலின் மிகநீளமான உயிரினம்.
இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பெறும்
மிகநீளமான கடலுயிரினம் நீலத் திமிங்கிலம் (Blue Whale). இதன் நீளம் 33 மீட்டர். அதாவது
108 அடி. இந்தப் பட்டியலில் மூன்றாவதாக இடம்பெறத்தக்கது விந்து திமிங்கிலம் எனப்படும்
ஸ்பெர்ம் திமிங்கிலம் (Sperm Whale). இதன் நீளம் 24 மீட்டர் (78.7 அடி).
நீலக்கடல்களின் நீளமான நான்காவது உயிரினம்
எது என்று கேட்டால் அது 18.8 மீட்டர், அதாவது 61.68 அடிவரை நீளமுள்ள அம்மணி உழுவை
(Whale Shark). ஐந்தாவது நீளமான உயிரினம் மேய்ச்சல் சுறா (Basking Shark). மேய்ச்சல்
சுறாவின் நீளம் ஏறத்தாழ 12.27 மீட்டர்
(40.2 அடி).
நீளமான உயிரினப்பட்டியலில் ஆறாவது இடத்தைப்
பெறுவது பெரும்பீலிக் கணவாய். இதன் நீளம் ஏறத்தாழ 12 மீட்டர் (39 அடி).
இதற்கு அடுத்தபடியாக ஏழாவது இடத்தை பசிபிக்
கடல் பெருங்கணவாய் பெறுகிறது. இதன் நீளம் 9.8 மீட்டர் (32 அடி). எட்டாவது இடத்துக்கு
சொந்தம் கொண்டாடுவது மிகப்பெரிய Giant Oarfish. இதன் நீளம் 8 மீட்டர் (26 அடி).
நீலத் திமிங்கிலம் |
நீளமான கடலுயிரினங்களில் 9ஆவது இடத்தைப் பெறுவது
Great white Shark எனப்படும் பெருஞ்சுறா அல்லது பெரு வஞ்சுறா. இதன் நீளம் 7 மீட்டர்.
அல்லது 22.96 அடி.
பத்தாவது இடத்தை யானைத் திருக்கை என தமிழில்
வழங்கப்படும் மண்டா ரே (Manta Ray) பெறுகிறது. வளர்ந்த யானைத்திருக்கையின் நீளம் பெருஞ் சுறாவின்
அதே நீளம்தான். அதாவது 7 மீட்டர். அல்லது 22.96 அடி.
இவற்றில் அம்மணித்திருக்கை, பெருஞ்சுறா, பெருங்கணவாய்,
மேய்ச்சல் சுறா, ஆனைத்திருக்கை போன்ற கடலுயிர்கள் பற்றிய தகவல்களை நமது நளியிரு முந்நீர் வலைப்பூவில்
காண முடியும்.
(அம்மணித்திருக்கை Oct, 2015, July 4,
2018, ஆனைத்திருக்கை Ap.28, 2016. மேய்ச்சல் சுறா Feb 25, 2017, பெருஞ்சுறா May
10, 2017, பெருங்கணவாய் May 29, 2017)
No comments :
Post a Comment