அறிய அரிய தகவல்கள்
1.
கியு-வி-யே (Cuvier) திமிங்கிலம். பிரான்ஸ்
நாட்டு இயற்கை ஆய்வாளரின் Cuvier-ன் பெயரால் இந்த வாத்து மூக்குத் திமிங்கிலம்
இப்படி அழைக்கப்படுகிறது. ‘கியு-வி-யே‘ என்பது‘தான் இந்த திமிங்கிலத்தின் பெயருக் கான சரியான
உச்சரிப்பு. உலகில் உயிர் வாழும் பாலூட்டிகளில் மிக அதிக ஆழத்தில்
முக்குளிக்கக் கூடிய திமிங்கிலம் இது. பத்தாயிரம் அடி
(2,992 மீட்டர்) ஆழத்துக்கு கடலில் இது முக்குளித்து
அங்கே 2 மணி நேரம் வரை தங்கியிருக்கும். மூச்செடுக்க மீண்டும் கடல் மட்டத்துக்கு வர சில நிமிடநேரம் இதற்கு போதும்.
2. முரல்…..ஊசிவாய் கொண்ட முரல் வகை மீன்கள் ஓசை மற்றும்
வெளிச்சத்தைக் கண்டால் அதை நோக்கி பாயக் கூடியவை. எனவே சில
ஆசிய நாடுகளில் மீனவர்கள் அவர்களது மீன்பிடி படகில், வாழைத்தண்டில்
படல்வேலி அமைத்து, அதன் பின்புறம் இருந்து ஓசை எழுப்பி இந்த
மீனைப் பிடிப்பார்கள். முரல் மீனை சமைக்கும் போது அதன்
எலும்புகள் பச்சை கலந்த நீலநிறமாகத் தெரியும். ஜப்பானியர்கள்
முரல் மீனை பச்சையாகக் கூட உண்பார்கள். முரல் மீன், ‘ஏழைகளின் கொப்புரக்குல்லா மீன்‘ (Marlin) என
அழைக்கப்படுகிறது.
3. கிளிஞ்சான் (Parrtofish). வாழ்நாளில் பலமுறை நிறம் மாறும். பாலினமும் மாறும்.
4. வண்ணாத்திமீன் (Butterfly fish). இரவில் பார் இடுக்குகளில் ஒளியும். அப்போது வேறுவிதமான வண்ணங்களைக் காட்டும்.
5. பெரும்பாரை மீன் (Giant Trevally). பசிபிக் கடலின் தீவு நாடான ஹவாயின் பண்பாட்டில்
இந்த மீன் ஒன்றரக் கலந்தது. ஆண்மை மற்றும் வீரத்தின் அடையாளமாகவும்,
தெய்வத்தன்மை பொருந்திய தாகவும் பெரும்பாரை கருதப்படுகிறது. பெண்கள் இந்த மீனை உண்ண மாட்டார்கள்.
6. அய்லஸ், பறளா
என்றெல்லாம் தமிழில் அழைக்கப்படும் டால்பின் மீன் (Dolphin fish), இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டின் சான்டோரினி பகுதி சுவரோவியங்களில்
இடம்பெற்ற பெருமைக்குரியது.
No comments :
Post a Comment