223. ஓரண்டை,
224. ஒடத்தேரி, 225. ஓரியான் சம்பு, 226. கடல் கெளுத்தி, 227. கல்வெட்டி, 228. கல்லடக்கை,
229. கல்வடக்கை, 230. கல் உறிஞ்சி, 231. கலவா (மூஞ்சான்), 232. கல்லூரி (மூஞ்சி கார்வா),
233. கடவுளா, 234. கடல் சீலா (மஞ்சள்நிறம், வயிறு கறுப்பு. தலை சட்டி போல இருக்கும்,
பார்க்கடலில் மட்டுமே ஒன்றிரண்டாகத் திரியும். சீலாப் போல கூட்டமாகத் திரியாது),
235 கடல் சவுக்கை, 236. கடலாடி, 237. கட்டக்கொம்பன், 238. கருந்திரளி, 239. கல்லாரல்,
240. கருக்கா (விளமீன்), 241. கச்சி (ககசி), 242. கச்சம், 243. கக்காசி (செந்நவரை),
244. கருங்காக்கணம், 245. கருங்கண்ணி, 246. கருணா விளமீன், 247. கருமுறை செல்வி,
248. கலக்கி, 249. கசலி, 250. கயல், 251. கட்டமேதல்,
252. கருப்பமட்டவன் (நவரை), 253. கடல் தவக்கை, 254. கறிமீன், 255. கறுப்புவால் புட்சக்கன்னி, 256. களறியன், 257. களிமீன்,
258. கருக்கு மட்டை (வெள்ளை), 259. களர் (மத்தி. முதுகில் பச்சை நிறம்), 260. கண்ணாடி
மீன், 261. கன்னமீன், 262. கன்னங்குட்டை, 263. கணவ ஓலை,
கத்தாளை
264.அளக்கத்தாளை,
265. ஆண்டிக் கத்தாளை (ஆண்டாமிக் கத்தாளை), 266. ஆனைக் கத்தாளை, 267. ஆனவாயன் கத்தாளை, 268. கீறுக் கத்தாளை,
269. சதைக் கத்தாளை, 270. புள்ளிக் கத்தாளை, 271. சாம்பல் கத்தாளை, 272. கருங் கத்தாளை,
273. வரிக் கத்தாளை, 274. முட்டிக் கத்தாளை, 275. மொட்டைக் கத்தாளை, 276. முறாக் கத்தாளை,
277. பன்னாக் கத்தாளை, 278. கலிங்கன், 279. சப்பைக் கலிங்கன் (கட்டைக் கலிங்கன்),
280. உருளைக் கலிங்கன், 281. கலைக்கான், 282. கட்லா,
கட்டா
283. செல் கட்டா,
284. ஓமலி கட்டா, 285. ஆரியக் கட்டா, 286. ஆழியாக் கட்டா, 287. ஓலைக் கட்டா, 288. ஓங்கல்
கட்டா (19 கிலோ வரை எடையிருக்கும்), 289. கறுப்புக்
கட்டா, 290. திரியா கட்டா, 291. மஞ்சள் கட்டா, 292. வங்கடை கட்டா, 293. குருக் கட்டா,
294. அம்முறிஞ்ச கட்டா (ஊசிமுகம், நடுக்கண்டம் வட்டமாக இருக்கும்), 295. கண்டல், 296.
கடலெலி, 297. கடமாடு.
கடமாடு
(Trunk Fish)
மாட்டுமீன்,
பெட்டி மீன் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த வகை பார் மீன், கடினமான வெளித்தோலைக் கொண்டது.
ஆமை ஓடு போல இந்த கனத்த தோல், மீனின் உடல் முழுவதையும் மூடியிருக்கும். இந்த உடல்
6 பக்கங்கள் கொண்ட செதிள் அல்லது தகடுகளால் ஆனது.
இந்த
கனமான தடித்ததோல் காரணமாக இந்த வகை மீனால் மிகமிக மெதுவாகத்தான் நீந்த முடியும். உடலை
நகர்த்துவது கடினம். மேல் தூவிகளோ, அடித்தூவிகளோ இல்லாத நிலையில் இந்த மீன் வால்புறம்
மேலும் கீழும் இருக்கும் சிறுதூவிகளை அசைத்தே நகர்கிறது.
பெட்டி
வடிவத்தில் இருப்பதால் ஆங்கிலத்தில் இது பெட்டி மீன் என அழைக்கப்படுகிறது. தமிழில்
இந்த மீனுக்கு கடமாடு என்பது பெயர்.
மாடு
போன்ற கண்கள் இருப்பதாலும், கண்களுக்கு மேலே மாட்டின் கொம்பு போன்ற துருத்தல் மேடு
இருப்பதாலும் இது மாடு என அழைக்கப்படுகிறது.
கடமாடு
குட்டியாக இருக்கும்போது அதன் உடல் நீள்வட்ட வடிவில் காணப்படும். மீன் முதிர முதிர
அது முக்கோண வடிவமாகும். இரை தின்னும் போது தலையை தரையில் ஊன்றி, இது முகத்தால் தரையைக்
கிளறி இரைதேடி இரையை உறிஞ்சித் தின்னும்.
மெதுவான
நீச்சல் காரணமாக மீன்வலைகளில் இது எளிதாக சிக்கும். ஆனால் உணவுக்காக யாரும் இதைப்பயன்படுத்த
மாட்டார்கள். ஆனால், வெளிநாடுகளில் இதன் தடித்த தோலுடன் இதை வறுத்துச் சாப்பிடும் பழக்கம்
உள்ளது.
கடமாடுகளில்
புள்ளிக் கடமாடு ஒன்றரை அடி நீளம் உடையது. அதுபோல முதுகில் 4 சேணக்குறிகள் கொண்ட லெதர்
ஜாக்கெட் என அழைக்கப்படும் மீனும் ஒன்றரை அடி நீளம் இருக்கும்.
நமது
கடல்களில் 7 அங்குல நீளமுள்ள சிறிய கடமாடு உண்டு.
கடமாட்டில்
மெல்லிய தோல் கொண்ட கடமாடும் உள்ளது. வெள்ளை நிறமான அதன்மேல் கறுப்புத் திட்டுகளும்,
கறுப்புநிற வரிகளும் காணப்படும்.
இன்னொரு
வகை கடமாடு, சிவப்புநிற நெற்றி, உதடுகளுடன், பச்சை நிறத்தில், நீலநிற வாலுடன்
விளங்கும்.
No comments :
Post a Comment