146. அடல் (அதள்), 147.நாய் அடல் (நாய்ப் பல்போல
ஈரடுக்குப் பல் உடையது), 148. மண் அடல் (வட்டமானது, வழுக்கும்), 149. அட்ளி (கருவாவல்
மாதிரியான மீன்), 150. அடவா, 151. அம்னி பிலால் என்ற புள்ளி பிலால், 152. அடமீன்,
153.அடையா, 154. அத்தி, 155. அழுவை, 156 கண் அழுவை (சிறியது), 157.அவுரி, 158. அறுக்குளா
(சீலா), 159. அவ்லிஸ் (அய்லஸ்) (கட்டா வகை)
அஞ்சாலை (ஆஞ்சாளை)
160. கறுப்பு அஞ்சாலை, 161. புளியன் அஞ்சாலை,
162. புள்ளி அஞ்சாலை (சிறுத்தை அஞ்சாலை), 163. பூ அஞ்சாலை, 164. வரி அஞ்சாலை, 165.
தவிட்டு அஞ்சாலை
அஞ்சாலை
அஞ்சாலையில் மொத்தம்
57 வகைகள் உள்ளன. இதில் மன்னார் வளைகுடாவில் மட்டும் 6 வகை அஞ்சாலைகள் காணப்படுகின்றன.
கருப்பு அஞ்சாலை, புளியன் அஞ்சாலை, புள்ளி அஞ்சாலை, பூ அஞ்சாலை, வரி அஞ்சாலை, தவிட்டு
அஞ்சாலை என்பன அவை. இதில், புள்ளி அஞ்சாலைக்கு சிறுத்தை அஞ்சாலை என்றொரு பெயர் உண்டு.
அஞ்சாலை மீன் அல்ல.
மீன்களுக்குரிய செல் எதுவும் அஞ்சாலைக்கு இல்லை. உடல் முழுக்க பொடிப்புள்ளிகளுடன் பாம்பின்
தோற்றம் கொண்ட அஞ்சாலைக்கு கண் சிறியது. பார்வைக் குறைவுள்ள அஞ்சாலை, இரவில் மட்டுமே
பார் விட்டு வெளியே வரும்.
அஞ்சாலை, ஒருவகையில்
கெம்பைலசின் (Gempylus) உறவுக்கார மீன். அது என்ன கெம்பலைஸ்?
கெம்பலைஸ் என்று
அழைக்கப்படும் (Snake Mackeral) பாம்புபோன்ற மீன், 3 அடி நீளம் கொண்டது.
இதன் மேற்புறம் கருநீலநிறமாகவும், அடிப்புறம் எஃகு கலந்த நீல நிறமாகவும் இருக்கும். இதன்
மெல்லிய தோல் இறுக்கிப்பிடித்தால் உரிந்து
வழன்று விடும்.
பகலில் இந்த மீனின்
கண்கள் மங்கிவிடும். இரவில் இரைதேடி ஆழத்தில் இருந்து இதுமேலே வரும். இதன் தாடையில்
உள்ள நீண்ட கூரிய பற்கள் மேல் தாடையின் பின்புறம் மடக்கக்கூடியவை.
கெம்பைலசின் வயிற்றைப்
பிடித்து பிதுக்கினால் அதன் உள்ளே கடலின் அடி ஆழத்தில் வசிக்கும் ஒருவகை வெள்ளைநிற
மீன் இருக்க வாய்ப்புள்ளது.
No comments :
Post a Comment