Tuesday, 27 October 2015

கிளாத்தி
363. ஊமைக்கிளாத்தி, 364. உறுகிளாத்தி, 365. தோல் கிளாத்தி, 366. கறுப்புக் கிளாத்தி, 367. வெள்ளைக் கிளாத்தி, 368. பீச்சுக் கிளாத்தி, 369. பேப்பர் கிளாத்தி, 370. ஒலைக் கிளாத்தி, 371. கட்டிக் கிளாத்தி, 372. நெடுங் கிளாத்தி, 373. காவா கிளாத்தி, 374. காக்கா கிளாத்தி, 375. முள்ளுக் கிளாத்தி (மூன்று முட்கள் உள்ள மீன், பிசின் போல ஒட்டும்)
கிளிஞ்சான்
376. பல் கிளிஞ்சான் (பெரியது), 377. பார்க் கிளிஞ்சான் (பச்சை நிறமானது ராணி கிளிஞ்சான்), 378. தம்பான் கிளிஞ்சான் (மேலே கறுப்பு, கீழே சிவப்பு வண்ணம்)
பல்கிளிஞ்சான்
Parrot fish என்பதை நம்மவர்கள் எளிதாக கிளிமீன் என்று மொழிபெயர்த்து விடுகிறார்கள். ஆனால் தமிழில் பல் கிளிஞ்சான் என்பதே இந்த மீனுக்குச் சரியான பெயர்.
கிளிஞ்சான், பார் மீன். கிளிஞ்சான்களில் மஞ்சள், நீல நிறங்களில் கிளிஞ்சான்கள் உள்ளன. வண்ணமயமான கிளிஞ்சான் ஒன்றும், நீலநிறம் கலந்த வாய் கொண்ட கிளிஞ்சான்களும் உள்ளன.
தமிழக பார்க்கடல்களில் பெரிய பல்கிளிஞ்சான் ஒன்றும், பச்சை நிற பார்க்கிளிஞ்சான் (ராணி கிளிஞ்சான்) ஒன்றும் உண்டு. மேலே கறுப்பும், கீழே சிவப்பும் கொண்ட தம்பான் கிளிஞ்சான் என்ற இனமும் உண்டு.
கிளிக்கு இருப்பதுபோன்ற கனமான தடித்தவாய் இருப்பதால் இவை கிளிஞ்சான் எனப் பெயர் பெற்றன. பலமான கூரிய பற்களும் கிளிஞ்சான்களுக்கு உள்ளன. பவளப்பாறைகளைக் கொரித்து அவற்றுக்குள் உள்ள சிறிய உயிர்களை இவை உண்ணக்கூடியவை.
கிளிஞ்சான் மீன்கள் Polyps எனப்படும் பவளப்பாறை மொட்டுகளை அவற்றின் ஓடுகளுடன் உண்ணக்கூடியது. பவள மொட்டு செரிமானம்ஆகி விடும் நிலையில் ஓடுகள் மீனின் வயிற்றில் சிதைந்து மணலாகி, கழிவாக வெளியேறுகிறது.
கிளிஞ்சான் மீன்கள் வெளியேற்றும் மணல்துகள்களாலேயே சிறுசிறு தீவுகள் உருவாவதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் கிளிஞ்சான்களில் 75 முதல் 100 இனங்கள் உள்ளன. பெரிய செதிள்களும், தடித்த அடர்த்தியான உடலும், கண்ணைப் பறிக்கும் வண்ணமும் இந்த மீன்களுக்குரிய தனிஇயல்பு.
கும்பலாக இவை காணப்பட்டாலும் கிளிஞ்சான்கள் கூட்டமீன்கள் (Schooling fishes)  அல்ல. இவை உறுதியாக, ஆனால் மெதுவாக நீந்தக்கூடியவை.
இரவில் தன்னைச் சுற்றி சளிபோன்ற ஒரு படலத்தைச் சுரக்கவிட்டு அதற்குள் தங்கியிருந்து, காலையில் அந்த போர்வையை விட்டு வெளியே வரும் கிளிஞ்சான் இனங்களும் உள்ளன.
கிளிஞ்சான்கள் தனிஇன மீன்கள் என்று கருதப்பட்டாலும் இவை Wrasse இன பார் மீன்களுக்கு உறவுக்கார மீன்கள் எனக் கருதப்படுகின்றன.
கிழங்கான்

379. வெள்ளை கிழங்கான், 380. கிளக்கான்.

Sunday, 25 October 2015

களவா(ய்)
298. கல்லுக் களவா, 299. குமரிக் களவா, 300. சிவப்புக் களவா, 301. சிக் களவா, 302. தோக் களவா, 303. மஞ்சக் களவா, 304. மரக் களவா, 305. புள்ளிக் களவா, 306. பஞ்சிக் களவா, 307. பாரக் களவா, 308. தலைக் களவா, 309. உள்ளக் களவா,
காளா
310. கட்டிக்காளா, 311. கணாக் காளா, 312. சீனாக் காளா, 313. தாழன் காளா, 314. உள்ளக் காளா,
காரல்
315. அப்புக்காரல் (மீன்பிடி வலையில் வந்து அப்பும் காரல்), 316. அமுக்குக் காரல், 317. கலிகாரல், 318. பொட்டுக்காரல், 319. நெடுங்காரல், 320. மஞ்சக் காரல், 321. மரவுக்காரல், 322. வரிக்காரல், 323. வரவுக் காரல், 324. உருவக் காரல் (குதிப்புக்காரல்), 325. ஊசிக்காரல், 326. ஒருவாக் காரல், 327. பெருமுட்டிக் காரல், 328. கவுட்டைக் காரல், 329. நெய்க் காரல், 330. வட்டக்காரல், 331. கண்ணாடிக் காரல் (சில்லாட்டை காரல், பளபளவென பாதரம் பூசிய கண்ணாடி போல மிளிரும்), 332. குழிக்காரல், 333. குல்லிக்காரல், 334. ஒட்டுக்காரல், 335. செவிட்டுக்காரல், 336. சென்னிக்காரல் 337. காணாக் காரல், 338. காணாவரிக்காரல் (வரிக்காரலில் சிறியது), 339. காசிக் காரல், 340. சுதும்புக் காரல் 341. சலப்பக் காரல், 342. சலப்ப முள்ளுக்காரல், 343. சளுவக் காரல், 344. சலப்பட்டக்காரல், 345. சிற்றுருவக் காரல் (சித்துருவக் காரல்), 346. பஞ்சக்காரல், 347. விளக்குக்காரல், 348. தீவட்டிக்காரல், 349. கொம்புக் காரல், 350. நாமக் காரல், 351. பொடிக் காரல் (பூச்சிக்காரல்), 352. பூட்டுக்காரல், 353. முள்ளங்காரல்,
354. கார்வா(ர்), 355. கானாங் கெழுத்தி, 356. காசியாபன், 357. காடன், 358. காக்கைக் கொத்தி (ஊசிமூக்கு உடையது)
காரை
359. கூட்டுக்காரை, 360. சுதுப்புனம் காரை, 361. மஞ்சள் காரை, 362. காட்டாவு
கிளாத்தி (Trigger Fish)
பார்மீன்களில் ஓரினமான கிளாத்தி, பாலிஸ்டே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் முதுகில் 3 முள்கள் காணப்படும். முதல்முள் தடித்த கனமான முள். இதையடுத்து வால் பக்கம் இருக்கும் 2ஆவது முள்ளை முன்னே தள்ளினால் மட்டுமே இந்த முதல்தடிமுள் உறுதியாக நிற்கும். 2ஆவது முள்ளை பின்னோக்கி தள்ளினால் தடித்த முள் தளர்ந்து விடும். இதில் 3ஆவது முள், துப்பாக்கியில் உள்ள இழுவிசை போன்றது. அது கிளாத்தியின் உடல்வழியாக 2ஆவது முள்ளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வகை மீன்களுக்கு டிரிக்கர் மீன் எனப் பெயர் வரக்காரணம் இந்த முள்தான்.
இந்த தடித்த முதல் முள், மேற்பாறைகளில் குத்திக் கொண்டு கிளாத்தி மீன் நீந்தாமல் ஓரிடத்தில் நிற்க உதவுகிறது. பிறசிறு மீன்களை விரட்டி இரை கொள்ளக்கூடிய கிளாத்தி, தனக்கு ஆபத்து எதிரிடும்போது பார்பொந்துக்குள் உடலைத் திணித்து, முதுகு முள்ளை பாரில்குத்தி தன்னை இறுக்கி ஒளிந்து கொள்ளும்.
கிளாத்தியின் முதுகுப்பின் தூவியும், வால்பக்க அடித்தூவியும், ஒரே அளவாக, பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும். கிளாத்தி மீனின் முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று.
கிளாத்தி அதன் பற்களை நறநறத்தோ, அல்லது எண்ணெய் கொண்ட வயிற்றுப் பள்ளையை அசைத்து சத்தம் எழுப்பக்கூடியது. இப்படி ஓசை எழுப்பாத கிளாத்தி ஊமைக் கிளாத்தி என அழைக்கப்படுகிறது.
கிளாத்தியில் பல வகைகள் உள்ளன.
கிளாத்தியின் சற்று கனமான தோலைக் கழற்றிவிட்டு சிலர் அதை உண்பார்கள். சிலர் கிளாத்தியை உண்ணமாட்டார்கள்.



Saturday, 24 October 2015

223. ஓரண்டை, 224. ஒடத்தேரி, 225. ஓரியான் சம்பு, 226. கடல் கெளுத்தி, 227. கல்வெட்டி, 228. கல்லடக்கை, 229. கல்வடக்கை, 230. கல் உறிஞ்சி, 231. கலவா (மூஞ்சான்), 232. கல்லூரி (மூஞ்சி கார்வா), 233. கடவுளா, 234. கடல் சீலா (மஞ்சள்நிறம், வயிறு கறுப்பு. தலை சட்டி போல இருக்கும், பார்க்கடலில் மட்டுமே ஒன்றிரண்டாகத் திரியும். சீலாப் போல கூட்டமாகத் திரியாது), 235 கடல் சவுக்கை, 236. கடலாடி, 237. கட்டக்கொம்பன், 238. கருந்திரளி, 239. கல்லாரல், 240. கருக்கா (விளமீன்), 241. கச்சி (ககசி), 242. கச்சம், 243. கக்காசி (செந்நவரை), 244. கருங்காக்கணம், 245. கருங்கண்ணி, 246. கருணா விளமீன், 247. கருமுறை செல்வி, 248. கலக்கி,  249. கசலி, 250. கயல், 251. கட்டமேதல், 252. கருப்பமட்டவன் (நவரை), 253. கடல் தவக்கை, 254. கறிமீன், 255. கறுப்புவால் புட்சக்கன்னி, 256. களறியன், 257. களிமீன், 258. கருக்கு மட்டை (வெள்ளை), 259. களர் (மத்தி. முதுகில் பச்சை நிறம்), 260. கண்ணாடி மீன், 261. கன்னமீன், 262. கன்னங்குட்டை, 263. கணவ ஓலை,
கத்தாளை
264.அளக்கத்தாளை, 265. ஆண்டிக் கத்தாளை (ஆண்டாமிக் கத்தாளை), 266. ஆனைக் கத்தாளை,  267. ஆனவாயன் கத்தாளை, 268. கீறுக் கத்தாளை, 269. சதைக் கத்தாளை, 270. புள்ளிக் கத்தாளை, 271. சாம்பல் கத்தாளை, 272. கருங் கத்தாளை, 273. வரிக் கத்தாளை, 274. முட்டிக் கத்தாளை, 275. மொட்டைக் கத்தாளை, 276. முறாக் கத்தாளை, 277. பன்னாக் கத்தாளை, 278. கலிங்கன், 279. சப்பைக் கலிங்கன் (கட்டைக் கலிங்கன்), 280. உருளைக் கலிங்கன், 281. கலைக்கான், 282. கட்லா,
கட்டா
283. செல் கட்டா, 284. ஓமலி கட்டா, 285. ஆரியக் கட்டா, 286. ஆழியாக் கட்டா, 287. ஓலைக் கட்டா, 288. ஓங்கல் கட்டா  (19 கிலோ வரை எடையிருக்கும்), 289. கறுப்புக் கட்டா, 290. திரியா கட்டா, 291. மஞ்சள் கட்டா, 292. வங்கடை கட்டா, 293. குருக் கட்டா, 294. அம்முறிஞ்ச கட்டா (ஊசிமுகம், நடுக்கண்டம் வட்டமாக இருக்கும்), 295. கண்டல், 296. கடலெலி, 297. கடமாடு.
கடமாடு (Trunk Fish)

மாட்டுமீன், பெட்டி மீன் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த வகை பார் மீன், கடினமான வெளித்தோலைக் கொண்டது. ஆமை ஓடு போல இந்த கனத்த தோல், மீனின் உடல் முழுவதையும் மூடியிருக்கும். இந்த உடல் 6 பக்கங்கள் கொண்ட செதிள் அல்லது தகடுகளால் ஆனது.
இந்த கனமான தடித்ததோல் காரணமாக இந்த வகை மீனால் மிகமிக மெதுவாகத்தான் நீந்த முடியும். உடலை நகர்த்துவது கடினம். மேல் தூவிகளோ, அடித்தூவிகளோ இல்லாத நிலையில் இந்த மீன் வால்புறம் மேலும் கீழும் இருக்கும் சிறுதூவிகளை அசைத்தே நகர்கிறது.

பெட்டி வடிவத்தில் இருப்பதால் ஆங்கிலத்தில் இது பெட்டி மீன் என அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த மீனுக்கு கடமாடு என்பது பெயர்.
மாடு போன்ற கண்கள் இருப்பதாலும், கண்களுக்கு மேலே மாட்டின் கொம்பு போன்ற துருத்தல் மேடு இருப்பதாலும் இது மாடு என அழைக்கப்படுகிறது.
கடமாடு குட்டியாக இருக்கும்போது அதன் உடல் நீள்வட்ட வடிவில் காணப்படும். மீன் முதிர முதிர அது முக்கோண வடிவமாகும். இரை தின்னும் போது தலையை தரையில் ஊன்றி, இது முகத்தால் தரையைக் கிளறி இரைதேடி இரையை உறிஞ்சித் தின்னும்.
மெதுவான நீச்சல் காரணமாக மீன்வலைகளில் இது எளிதாக சிக்கும். ஆனால் உணவுக்காக யாரும் இதைப்பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், வெளிநாடுகளில் இதன் தடித்த தோலுடன் இதை வறுத்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளது.
கடமாடுகளில் புள்ளிக் கடமாடு ஒன்றரை அடி நீளம் உடையது. அதுபோல முதுகில் 4 சேணக்குறிகள் கொண்ட லெதர் ஜாக்கெட் என அழைக்கப்படும் மீனும் ஒன்றரை அடி நீளம் இருக்கும்.
நமது கடல்களில் 7 அங்குல நீளமுள்ள சிறிய கடமாடு உண்டு.
கடமாட்டில் மெல்லிய தோல் கொண்ட கடமாடும் உள்ளது. வெள்ளை நிறமான அதன்மேல் கறுப்புத் திட்டுகளும், கறுப்புநிற வரிகளும் காணப்படும்.
இன்னொரு வகை கடமாடு, சிவப்புநிற நெற்றி, உதடுகளுடன், பச்சை நிறத்தில், நீலநிற வாலுடன் விளங்கும்.

Friday, 23 October 2015

166. அருந்தல், 167.அராம்பு, 168. அரடுக்கு, 169. அரணை (பாம்பு மாதிரியான மீன். சாப்பிட மாட்டார்கள்), 170. அண்டிகா, 171. அங்கலாத்தி, 172. அக்கா கிளிமீன், 173. அளக்கத்தான், 174. அயலை, 175. முண்டக்கண் அயலை, 176. அரலுக்கு, 177. அரஞ்சான் பொடி, 178. அகலை, 179. அவிலி, 180. ஆரல், 181. ஆளல், 182. ஆழியா, 183. ஆக்கணா, 184. இலத்தி, 185. புள்ளி இலத்தி, 186. இடிமீன், 187. இணாட்டு, 188. ஈக்குத் தொண்டன், 189. உறு, 190. உருவு (ஒட்டுமீன்), 191. உரா, 192. கொம்பு உரா, 193. உல்லம் (அழிந்து விட்ட மீன், உள்ளதை விற்று உல்லம் வாங்கிச் சாப்பிடு என்பது பழமொழி), 194. உடும்பு, 195. உழுவாரா, 196. ஊளி மீன், 197. கரை ஊளி (திரியான்), 198. மாஊளி, 199. மஞ்சள் ஊளி, 200. ஊடன் 201. கறுப்பு ஊடன், 202. புள்ளி ஊடன், 203. வரி ஊடன், 204. ஊட்டான், 205. ஊரா, 206. ஊர்த்த வெள்ளை, 207. ஊலா (ஊளா), 208. ஊடகம், 209. ஊடவரை, 210. ஊசிக்கவலை, 211. எரையா (எறியா), 212. எறியாள், 213. எறும்பன் (எலும்பன்), 214. எலக்கு (சிறிய வாளை மீன்), 215. எட்டவாளை (சூரை இன மீன்), 216. ஒட்டி (முயல்மீன்), 217. ஒசிகா, 218. ஒடுக்கு, 219. ஓரா (முள் குத்தினால் கடுக்கும், இதன் நெய்யைக் கொண்டே இதைப் பொறிக்கலாம்) 220. வெள்ளை ஓரா, 221. வடையன் ஓரா (கறுப்புநிற வரிகள்), 222. ஓவாய்.

Thursday, 22 October 2015

146. அடல் (அதள்), 147.நாய் அடல் (நாய்ப் பல்போல ஈரடுக்குப் பல் உடையது), 148. மண் அடல் (வட்டமானது, வழுக்கும்), 149. அட்ளி (கருவாவல் மாதிரியான மீன்), 150. அடவா, 151. அம்னி பிலால் என்ற புள்ளி பிலால், 152. அடமீன், 153.அடையா, 154. அத்தி, 155. அழுவை, 156 கண் அழுவை (சிறியது), 157.அவுரி, 158. அறுக்குளா (சீலா), 159. அவ்லிஸ் (அய்லஸ்) (கட்டா வகை)
அஞ்சாலை (ஆஞ்சாளை)
160. கறுப்பு அஞ்சாலை, 161. புளியன் அஞ்சாலை, 162. புள்ளி அஞ்சாலை (சிறுத்தை அஞ்சாலை), 163. பூ அஞ்சாலை, 164. வரி அஞ்சாலை, 165. தவிட்டு அஞ்சாலை

அஞ்சாலை
அஞ்சாலையில் மொத்தம் 57 வகைகள் உள்ளன. இதில் மன்னார் வளைகுடாவில் மட்டும் 6 வகை அஞ்சாலைகள் காணப்படுகின்றன. கருப்பு அஞ்சாலை, புளியன் அஞ்சாலை, புள்ளி அஞ்சாலை, பூ அஞ்சாலை, வரி அஞ்சாலை, தவிட்டு அஞ்சாலை என்பன அவை. இதில், புள்ளி அஞ்சாலைக்கு சிறுத்தை அஞ்சாலை என்றொரு பெயர் உண்டு.
அஞ்சாலை மீன் அல்ல. மீன்களுக்குரிய செல் எதுவும் அஞ்சாலைக்கு இல்லை. உடல் முழுக்க பொடிப்புள்ளிகளுடன் பாம்பின் தோற்றம் கொண்ட அஞ்சாலைக்கு கண் சிறியது. பார்வைக் குறைவுள்ள அஞ்சாலை, இரவில் மட்டுமே பார் விட்டு வெளியே வரும்.
அஞ்சாலை, ஒருவகையில் கெம்பைலசின் (Gempylus) உறவுக்கார மீன். அது என்ன கெம்பலைஸ்?
கெம்பலைஸ் என்று அழைக்கப்படும் (Snake Mackeral) பாம்புபோன்ற மீன், 3 அடி நீளம் கொண்டது. இதன் மேற்புறம் கருநீலநிறமாகவும், அடிப்புறம் எகு கலந்த நீல நிறமாகவும் இருக்கும். இதன் மெல்லிய  தோல் இறுக்கிப்பிடித்தால் உரிந்து வழன்று விடும்.
பகலில் இந்த மீனின் கண்கள் மங்கிவிடும். இரவில் இரைதேடி ஆழத்தில் இருந்து இதுமேலே வரும். இதன் தாடையில் உள்ள நீண்ட கூரிய பற்கள் மேல் தாடையின் பின்புறம் மடக்கக்கூடியவை.

கெம்பைலசின் வயிற்றைப் பிடித்து பிதுக்கினால் அதன் உள்ளே கடலின் அடி ஆழத்தில் வசிக்கும் ஒருவகை வெள்ளைநிற மீன் இருக்க வாய்ப்புள்ளது.

Wednesday, 21 October 2015

101.பூவாளித் திருக்கை, 102.கொம்புத் திருக்கை, 103. குருவித் திருக்கை, 104. வல்வடித் திருக்கை, 105. கொட்டுவா திருக்கை, 106. சுருள் திருக்கை, 107. புளியன் திருக்கை (புள்ளியன் திருக்கை), 108. கள்ளத் திருக்கை, 109. வருக்கை, 110. தப்பாக்குழி, 111. சோனகத் திருக்கை, 112. கருவால் திருக்கை (கருவாலன் திருக்கை. இதன் சதை கறுப்பாக பஞ்சுபோல இருக்கும்), 113. ஓட்டைத் திருக்கை, 114. கோட்டான் திருக்கை, 115. பஞ்சாடு திருக்கை (பச்சை கலந்த பழுப்பு நிறமாக இருக்கும்), 116. மட்டத் திருக்கை, 117. சப்பைத் திருக்கை, 118. செப்பத் திருக்கை, 119. நெய்த் திருக்கை, 120. கழுவாய், 121. சீமான் திருக்கை, 122. ஆடாத் திருக்கை (ஆடாமுழித் திருக்கை), 123. உள்ளான் திருக்கை, 124. கண்டாங்கி, 125. ஊழித் திருக்கை, 126. பூவாலித் திருக்கை, 127. செம்மூக்கன் திருக்கை, 128.கூண்டத் திருக்கை, 129. சமன் திருக்கை, 130. தடங்கான் திருக்கை, 131. பாஞ்சாலன் திருக்கை, 132. வண்ணாத்தித் திருக்கை, 134. கொப்புத் திருக்கை, 135. சங்கோசான் திருக்கை, 136. கட்டுத் திருக்கை, 137. கண்ணாமுழித் திருக்கை, 138. முள்ளுத் திருக்கை, 139. கண்ணந்திரச்சி, 140. அரத் திரச்சி, 141. தும்பத் திரச்சி. 142. பூவாளித் திருக்கை

உலுக்கு (மின்சாரத் திருக்கை)

143. புள்ளி உலுக்கு (பெரியது), 144. மான் உலுக்கு, 145. தவிட்டு உலுக்கு, (குட்டி உலுக்குத்தான் அதிக மின் அதிர்வைக் கொடுக்கும்)

Tuesday, 20 October 2015

68.இழுப்பா, 69. வேளா, 70. கலக்கு வேளா, 71.கூன் உழுவை, 72. கச்சி உழுவை, 73. பூந்தி உழுவை, 74. பால் உழுவை  (படங்கன்) , 75. புள்ளி உழுவை, 76. கள் உழுவை (பண்டகள்), 77. மான் உழுவை, 78. மட்டி உழுவை (மட்டி மிக்க என்று அழைக்கப்படும் இதன் உடல் முழுவதும் முள்களாக இருக்கும்), 79. வெளிச்சி (தும்பிலி), 80.

திருக்கை
81. மணத்திருக்கை, 82. புள்ளித் திருக்கை (வழுவாடி), 83 கட்டித் திருக்கை, 84. ஓலைவாலன் திருக்கை, 85. மணிவாலன் திருக்கை, 86. சங்குவாயன் திருக்கை, 87. புள்ளி சங்குவாயன் திருக்கை,  88. வட்டத் திருக்கை, 89. செந்திருக்கை, 90. முண்டக்கண்ணன் திருக்கை, 91. அம்மணத் திருக்கை, 92. அடல் திருக்கை, 93. செம்மண் திருக்கை, 94. களித்திருக்கை (பெரிய திருக்கை), 95. அட்டணைத் திருக்கை (பெருந்திருக்கை), 96. பேய்த் திருக்கை, 97. அழுக்குத் திருக்கை, 98. சுண்ணாம்புத் திருக்கை, 99. யானைத் திருக்கை, 100. கழக்குத்  திருக்கை,


Monday, 19 October 2015

அம்மணி உழுவை  (பெட்டிச்சுறா)
67. அம்மணி உழுவை (Whale shark). உலகின் மிகப்பெரிய மீன் இனம் இதுதான். தமிழகத்தின் தென்கடல் பகுதியில் அம்மணி உழுவை என்றும், தமிழகத்தின் வடகடல் பகுதிகளில் பெட்டிச்சுறா என்றும் இது அழைக்கப்படுகிறது.
முழுநிலா காலத்துக்கு ஒரு வாரத்துக்குப்பிறகு பவளப்பாறைகள் லட்சக்கணக்கான சின்னஞ்சிறு முட்டைகளை வெளிவிடும். கடலின் மேற்பரப்பில் வந்து மிதக்கும் இந்த முட்டைகளை, கிரில் (Krill) எனப்படும் இறால் போன்ற சின்னஞ்சிறு உயிர்கள் இரை கொள்ளும். பிளாங்டன்களுடன் கலந்து மிதக்கும் கிரில்களை உண்ண அம்மணி உழுவை அங்கு வந்து சேரும்.
அம்மணி உழுவை ஹோம்ராஸ் என்னும் வகைப்பாட்டைச் சேர்ந்த உணவுக்குப் பயன்படாத மீன். இதைப் பிடித்து கரைக்கு கொண்டுவந்தால் அதன் தசை தண்ணீர் போல உருகும். விரைவில் மீன் கரைந்து ஒன்றுமில்லாமல் கொளகொளத்துப் போய்விடும்.
முப்பதடி நீளமும், 40 டன் எடையும் கொண்ட அம்மணி உழுவை, சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில், டென்னிஸ் பந்தளவு எண்ணற்ற புள்ளிகள் கொண்டது. எங்கிருந்து வந்தது என்பது தெரியாமலேயே இது திடீரென கடலில் தோன்றி நீந்துபவர்களை திகைக்க வைக்கும்.
அம்மணி உழுவையை முதன்முறையாக கடலில் பார்ப்பவர்களை அதன் பிரம்மாண்ட புள்ளிப் பொறித்த தோற்றம் கண்டிப்பாக பயமுறுத்தும்.
மிக மெதுவாக கடலில் நீந்தும் அம்மணி உழுவை, மனிதர்களின் அண்மையை வெறுப்பதில்லை. மனிதர்களுக்கு எந்த தீங்கும் இது இழைத்ததில்லை. இது நீந்திச் செல்லும்போது இதன் அருகில் நீந்தும் யாரையும் இது தாக்கியதும் இல்லை. இத்தனைக்கும் 4 ஆயிரம் பற்ககளைக் கொண்ட மீன் இது.
அம்மணி உழுவையின் முக்கிய உணவு பிளாங்டன்தான். நெத்தலி போன்ற சிறுமீன்களையும் இது உணவாகக் கொள்ளும். இதன் பிரம்மாண்டமான வாய் கடல்நீரை வடிகட்டி, அதில் உள்ள பிளாங்டன்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளும்.
அம்மணி உழுவை சில வேளைகளில் தெரியாத்தனமாக படகுகள் மீது மோதி விடுவதும் உண்டு. சிலவேளைகளில் மீன்பிடி படகை இது விடாமல் பின்தொடரவும் செய்யும். அம்மணி உழுவை முட்டையிடுகிறதா? குட்டி போடுகிறதா என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிர்.


அம்மணி உழுவை பார்மீன் இல்லை என்றாலும் அடிக்கடி கடல்
 பார்களுக்கு வந்து செல்லக்கூடிய மீன்.

Sunday, 18 October 2015

பன்மீன் கூட்டம்

நம் விழியை விட்டும், மொழியை விட்டும் விலகி நீந்தத் தொடங்கியிருக்கும் ஓராயிரம் மீன்களின் தொகுப்பு.
சுறா
1.திருவாளியன் சுறா, 2. ஓலைச்சுறா, 3. பால்சுறா, 4. குண்டன் சுறா (தடியன் சுறா), 5. குமரிச்சுறா, 6. வழுக்குச் சுறா, 7. கோர சுறா, 8. அடுக்குப்பல் சுறா, 9. குறுங்கண் சுறா, 10. குரங்கன் சுறா. 11. செஞ்சுறா, 12. கொம்பன் சுறா. 13. வெள்ளைச் சுறா. 14. மட்டிச் சுறா, 15. மணிச்சுறா. 16. கோலாச் சுறா. 17. காலன் சுறா. 18. ஆரணிச் சுறா. 19. மேயும் சுறா (மேய்ச்சல் சுறா) 20, படுவாய்ச் சுறா, 21. வடுவன் சுறா. 22. புள்ளிச்சுறா. 23. வெண்ணெய்ச் சுறா. 24. நெளிஞ்சுறா,  25. பேய்ச் சுறா. 26. புடுக்கன் சுறா. 27. பரங்கிச்சுறா. 28. நண்டுதின்னிச் சுறா. 29. நண்டு பொறக்கிச் சுறா. 30. ஆத்துச் சுறா (ஆத்துவாய் சுறா) 31. கட்ட சுறா (பிள்ளைச் சுறா), (காட்டச்சுறா), 32. பெருஞ்சுறா (பெருந்தலைச் சுறா), 33. நெடுந்தலைச் சுறா, 34. கரமுடிச் சுறா (கருமுடிச் சுறா), 35. புல்லிச் சுறா, 36. வல்லுலன் சுறா, 37. திரவிமூக்கு சுறா, 38. பில்லைச் சுறா, 39. கொப்புள் சுறா, 40. கூரச் சுறா, 41. முள்ளன் (குமரி மாவட்டச் சுறா, வால் பெரியது), 42. கீரிப்பல்லன் சுறா, 43. கோச்சுறா, 44. கணவாய்ச் சுறா, 45. பஞ்சுறா (மஞ்சள் நிறம், வயிற்றுப் பக்கம் வெள்ளை) (பஞ்சல் சுறா), 46. குட்டிச்சுறா, 47, நெளியன் சுறா, 48. இனப்பத்திச் சுறா (பெரிய அளவிலான மீன்), 49. மண்டையன் சுறா, 50. ஒற்றைக் கொம்பன் சுறா, 51. வெள்ளைக் கொம்பன் சுறா, 52, வரிப்புலியன், 53. வரிக்குரங்குச் சுறா, 54. கொம்புளிச் சுறா, 55. மடையன் சுறா, 56. மம்மட்டிச் சுறா, 57. மானச் சுறா, 58. முருகவுருட்டி சுறா, 59. தாழைச் சுறா, 60. மழுவன் சுறா, 61. துப்புச்சுறா, 62, வெள்ளுடும்பன் (இதன் முட்டையைக் கத்தியாலும் வெட்ட முடியாது), 63. உழுவன் சுறா, 64, அச்சாணிச் சுறா, 65. மஞ்சள் சுறா (பிள்ளை பெற்ற அன்னையருக்கு பால் சுரக்க இதைக் கொடுப்பார்கள்), 66. கம்பம் சுறா (வெலங்குத் தண்ணீரில் (ஆழ்கடலில்) உள்ள சுறா.




Friday, 2 October 2015

கோஸ்தா என்றால் மாலுமி

போர்ச்சுக்கீசியர்கள் முத்துக்குளித்துறைக்கு தந்த குடும்பப் பெயர்கள் ஏறத்தாழ எண்பது.
பெர்னாண்டோ (பர்னாந்து), அல்மெய்தா, கோமஸ், லோபோ, மச்சாடோ, மோத்தா, வாஸ், வாய்ஸ், பெரைரா, கொரையா, மஸ்கரனாஸ், பீரிஸ், கூஞ்ஞே, தற்குரூஸ், தல்மேத்தா, கல்தேரா, கொரேரா, டி கோஸ்தா, ரோட்ரிகஸ், ரொட்ரிகோ, மிராண்டா, டிவோட்டா, பாய்வா, கர்டோசா, மெதடிஸ், டி சில்வா, டி சூசா, டி குரூஸ், டி ரோஸ், பிஞ்ஞோரா, அல்வாரிஸ், வல்தாரிஸ், வதேரா, கர்வாலியோ (கர்வாலோ), ரோச், விக்டோரியா, மொரேய்ஸ், சில்வேரா, காகு, குத்தாலினி,  லோபஸ், லியோன், மொரேல், மெல், மென்டிஸ், மெனஸ், மென்டோன்கா, கல்தேரா, பசங்கா, பிமன்டோ, ராயன், ராவேல், செக்குய்ரா, சோரிஸ்...

போன்றவை அவற்றுள் சில.
இவை தவிர நம் வாயில் நுழையாத, நம் பக்கம் புழக்கத்தில் இல்லாத போர்ச்ச்கீசிய குடும்பப் பெயர்களும் ஏராளமாக உள்ளன.
கவுத்தோ, சல்தான்கா, ஓர்த்தா, வர்த்தமா, மெஸ்கிட்டா, டி மெல்லோ, லிஸ்போவ, நொரன்கா, காமா, மெயினுர்லெஸ், காம்போய, அமரால், அல்பர்க்கர், அப்ரியு, வெய்ரா, டி வாலே, ஆசிவெய்ரா, மான்சான்றோ போன்றவறை அவற்றுள் சில...
போர்ச்ச்கீசிய குடும்பப் பெயர்களுக்கு உள்ள அர்த்தங்கள் விசித்திரமானவை.
எடுத்துக்காட்டாக டி கோஸ்தா என்ற பெயர் மாலுமியைக் குறிக்கிறது.
டி கோஸ்தா என்ற சொல்லுக்கு கடற்கரையில் இருந்து வந்தவர் என்றும் அர்த்தமாம்.
டி குரூஸ் என்றால் சிலுவையில் இருந்து வந்தவர் என்று அர்த்தமாம்.
லோபோ என்றால் ஓநாய் என்று அர்த்தம்.
(லோபோக்கள் வருத்தப்படவேண்டாம். ஐரோப்பாவில் சிங்கம்,புலி இல்லை. அங்கு மதிக்கத்தக்க பெரிய விலங்கு ஓநாய்தான். தவிர, ரோமானிய நாகரீகத்தைத் தோற்றுவித்த ரோமுலஸ், ரெமுசுக்கு பாலூட்டி அவர்களை வளர்த்தது ஓர் ஓநாய்தான்)
கோமஸ் என்றால் நல்ல மனிதர்.
டி சில்வா என்றால் காட்டில் இருந்து வந்தவர் என்று அர்த்தம்.
பெரைரா என்றால் இரும்புச் சுரங்கத்தில் இருந்து வந்தவர்.
செக்குய்ரா என்றால் வறண்ட பாலைநிலத்தில் இருந்து வந்தவர். சல்தான்கா  என்றால் அவர் ஸ்பெயின் நாட்டின் சல்தான்கா நகரில் இருந்து வந்தவர் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தோல் பதனிடும் வேலை செய்பவருக்கு கொரியா என்று பெயர்.
பியர் மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவே குடியிருந்தால் அவர் பெரைரா,
மொரெய்ஸ் என்றால் மல்பெரி மரங்களுக்கு நடுவில் வாழ்பவர் என்று அர்த்தம்.
கவுத்தோ என்றால் சுற்றிலும் புல்வெளி சூழ்ந்த இடத்தில் இருந்து வந்தவர்.
மிராண்டா என்றால் அற்புதமானவர், அன்பு நிறைந்தவர் என்று அர்த்தம்.
கொன்சால்வஸ் என்றால், ஆயுதமின்றி வெறும் கையால் சண்டையிடக் கூடிய வீரர்.
பிண்டோ என்றால் கண்ணாடி அணிந்தவர் என்று அர்த்தமாம்.