முஞ்சோள் (Spotted
Coral Trout)
பார்ப்பகுதி வேட்டையாடி மீன் |
களவா (Grouper) போன்ற
பார்மீன்களில் ஒன்று முஞ்சோள். களவா, பன்னா மீன்களுக்கு இது மிகவும் நெருங்கிய
உறவுக்கார மீன்.பிறந்த முதல் 3 ஆண்டுகளில் இதன் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். அதன்பின்
இதன் வளர்ச்சி வேகம்
குறையத் தொடங்கும். 120 செ.மீ.
அளவுக்கு இது வளரக்கூடியது.
வளர்ந்த பெரிய மீன், 25 கிலோ
எடையுடன் திகழ்ந்து ஏறத்தாழ 20 ஆண்டு
காலம் உயிர்வாழக்கூடியது.
பார்மீன்கள் யாவுமே பொதுவாக
அழகு நிறைந்தவை. முஞ்சோளும் அதற்கு விதிவிலக்கல்ல. இதன் மெல்லிய ஈரம்நிறைந்த
வெண்மைநிற சதை மிகவும் ருசியானது. மீனை வெட்டியபிறகு இதன் சதைத் துண்டங்களை
மென்மையாக கையாளாவிட்டால் அவை உடைந்து விடக் கூடியவை.
முஞ்சோள்களில் வளர்ந்த பெரிய மீன்கள் பார்களில் வாழும் பலவகை மீன்களை
உணவாக்கக் கூடியவை. சிறிய முஞ்சோள்கள் இறால்கள், கணவாய்களை உணவாக்கிக்
கொள்ளும்.
முஞ்சோள் |
தங்கியிருக்கும் இடத்தில்
பதுங்கியிருந்தபடி பொறுமையாகக் காத்திருந்து இரையை வேட்டையாடுவது முஞ்சோளின்
வழக்கம். சிலவேளைகளில் நெத்தலி, வெங்கணா
மீன் கூட்டங்களை விரட்டிச் சென்றும் இது வேட்டையாடும். அந்திமாலையும், அதிகாலைப் பொழுதுமே இதன்
வேட்டை நேரம். உணவு உண்ணும் போது முஞ்சோள் மீன் வண்ணம் மாறக் கூடியது.
முஞ்சோளின் பெரிய
வாய்க்குள் பல அடுக்கு கூரிய பற்கள் காணப்படும். சிலவேளைகளில் தனது இனத்தைச்
சேர்ந்த குட்டி மீன்களையும் முஞ்சோள் இரையாக்கிக் கொள்ளும். மிகுந்த ஆர்வத்துடன்
உணவை வேட்டையாடி உண்ணும் முஞ்சோள் மீன்கள், சில நாள்களில் உணவு எதையும் உண்ணாமல்
வாழ்வதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முஞ்சோளின் அறிவியல் பெயர் Plectropomus maculatus.
No comments :
Post a Comment