ஊடகம் (Gerres Filamentosus)
ஊடகம் எனவும் சில வேளைகளில் ஊடான் எனவும் அழைக்கப்படும் சிறிய
வகை மீன் இனம் இது. இந்த
வகை மீன் இனத்தின் அறிவியல் பெயர் ஜெரஸ் (Gerres) எனத் தொடங்கும்.
இந்த ஜெரஸ் என்ற சொல்லுக்கு,
‘ஒருவகை நெத்தலி மீன்’ என்பது அர்த்தமாம்.
Mojarro, Silver Biddy என்பது ஊடக இனத்தின் பொதுமைப் பெயர். ஊடகத்தில் மொத்தம் 28 வகைகள்
இருக்கின்றன.
ஊடகத்தில் Gerres Filamentosus, வெள்ளிநிறம்
கொண்ட மீன். உடல் முழுவதும் அடர்செதிள்கள்
படர்ந்த மீன் இது. இதன் முதுகுத் தூவியில் முன்பக்க
முதல்தூவி நீளமாக சாட்டைபோல இருக்கும். இந்த மீனுக்கான எளிய
அடையாளம் இந்த சாட்டைத் தூவிதான். Whipfin Silver biddy என
இந்த மீன் அழைக்கப்பட இதுவே காரணம். ஆனால், சில மீன்களுக்கு இந்த சாட்டைத் தூவி உதிர்ந்து விழுந்து விடவும்
வாய்ப்புண்டு.
ஊடக மீனின் முதுகுத்தூவியில் 10 முதல் 11 கதிர்த்தூவிகளும், 9 முட்களும்
இருக்கும். முதல் தூவியில் தொடங்கி அடுத்தடுத்த
கதிர்த்தூவிகள் சரிவாக இருக்கும்.
ஊடகத்தின் அடிவயிற்றுப் பகுதியில், வால் தொடங்கும் இடத்தில் சிறிய கரடான
முட்களுடன் சிறுதூவி இருக்கும். வால் கவை வால்.
ஊடகம் அதன் வாயைத் திறக்காதபோது, அதன் மேல்தாடை ஒரு சிறிய குழிக்குள் பொருந்தி இருப்பதைப் போலத் தோன்றும்.
உணவு உண்ண வாயைத் திறக்கும்போது, வாய்
துருத்திக் கொண்டு கீழ்நோக்கி இருப்பதுபோலத் தோன்றும்.
அனைத்துண்ணியான ஊடகம், மணற்பாங்கான கரையில் கடல்தரையை ஒட்டி வாழும் மீன். சில
வேளைகளில் இந்த மீன், கடல்நீரும் நன்னீரும் கலந்த கடற்கழிப்
பகுதிகளிலும் வாழும். நன்னீரிலும் கூட ஊடகத்தால் வாழ
முடியும்.
ஊடகத்தில் 51 மில்லி
மீட்டர் முதல் 110 மில்லிமீட்டர் நீளமுள்ள சிறிய மீன்கள்
விரைவாக உணவு உண்ணக் கூடியவை. அதுவே 111 மி.மீ. முதல் 180 மி.மீ. வரை வளர்ந்துவிட்டால்
இதன் இரையுண்ணும் வேகம் குறைந்து விடும்.
250 மி.மீ. முதல் 270 மி.மீ. வளர்ந்தால் இரை தின்னும் வேகம் இன்னும் குறைந்து விட வாய்ப்புண்டு.
ஊடகத்தில் எந்த ஒரு மீனும் ஓரடியைத் தாண்டி வளர் வதில்லை. பெரிய ஊடகங்கள் மனிதர் களால் உண்ணப்படுகின்றன.
இந்த வகை மீனை தூண்டில் இரையாகவும் மனிதர்கள் பயன் படுத்துவதுண்டு.
ஊடகத்தில் மஞ்சள்நிறத்தூவி கொண்ட ஊடகம், பத்தங்குலம் வரை வளரக்கூடியது.
No comments :
Post a Comment