காலா
(Threadfin)
மடவைக்கு
மிகவும் உறவுக்கார மீன் காலா (Threadfin). மடவை மீனைப்பற்றி
பதிவு இட்டபிறகு காலாவைப்
பற்றி குறிப்பிடாமல் இருந்தால் காலா மீன் ஒருவேளை
நம்மீது கோபம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதனால், காலாவைப் பற்றியும்
பதிவிட்டு விடலாம்.
தனித்துவமாக
அமைந்த உருட்டு விழிகள்,கன்னப் பொருத்துகளில்
மடவையைப்
போலவே வெள்ளி சாம்பல்
நிறத்தில் விளங்கும் மீன், காலா மீன்.
குழப்பமான 100 வகை குடும்பங்களை
உள்ளடக்கிய Perciformes என்ற வகைப் பாட்டில் அடங்கும்
மீன் இது. சூரை, கொடுவா போன்ற மீன்களும் கூட இந்த வகைப்பாட்டுக்குள்
அடங்கும் மீன்களே.
காலா மீனின் கன்னத்தூவிகளை
மேற்பகுதி, கீழ்ப்பகுதி என இருவேறாகப் பிரிக்கலாம். அதில் கீழ்ப்பகுதியில்
ஆறு முதல் அதற்கும்
அதிகமான நூல் போன்ற இழைதூவிகள் தன்னிச்சையாக
அசைந்தாடும். இந்த நூலிழைத்
தூவிகள் அனைத்தும் உணர்வான்கள். காலா மீன் கடல்தரையில் இரையைக்
கண்டுணர இந்த நூல்தூவிகள்
பயன்படுகின்றன.
காலாவின்
மூக்கு, மடவையின் மூக்கைவிட
மொண்ணையானது. கண்கள் பெரியவை. காலாவின் கண்களை
ஒளிஊடுருவக்கூடிய ஒரு சவ்வுத் தோல் மூடியிருக்கும்.
காலா மீனின் முதுகில்
மடவை மீனைப்போலவே இரு தனித்தனி தூவிகள்
காணப்படும். நெகிழும் தன்மை கொண்ட முதல் தூவியில் 7 முதல் 8 முட்களும், 2ஆவது
தூவியில், ஒரு முள்ளும் 11 முதல் 18 கதிர்த்தூவிகளும்
விளங்கும்.
காலா மீன்களில், 15 சென்டி
மீட்டர் நீளம் முதல் ஆறடி நீளம் வரையிலான பலவித காலாக்கள் உள்ளன. மிகப்பெரிய காலா 140 கிலோ வரை கூட நிறையிருக்கும். காற்றுப்பை எனப்படும்
பள்ளை உள்ள காலாக்களும், ஏன் பள்ளை இல்லாத காலாக்களும்கூட
இருக்கின்றன.
காலா மீனில் 33 வகைகள்
உள்ளன.
சீனாக்காலா, கட்டிக்காலா, தாழங்காலா, உள்ளங்காலா, பனிக்காலா, வாளன் காலா, வெள்ளைக்காலா, கணாக்காலா
போன்றவை தமிழில் உள்ள காலாக்களில் சில.
காலாவின்
வயிற்றில் உள்ள பள்ளை, மீன்கூழ்பசை தயாரிக்கப்
பயன்படுகிறது.
வணக்கம் அய்யா,மீன்கள் குறித்து நீங்கள் எழுதி வரும் கட்டுரைகள் மிகவும் அற்புதமாக உள்ளது.Threadfin காலா மீனைப்பற்றி விக்கிபீடியாவில் தேடிய பொழுது கிடைத்த கட்டுரைகள் சிறப்பானதாக இல்லை,உறலிஇதோ https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%80 .
ReplyDeleteநீங்கள் மீன்களைப் பற்றி நன்றாக எழுதுகிறீர்கள். நீங்கள் விக்கிபீடியாகட்டுரைகைளில் தமிழில் எழுதினால் பல மாணவர்கள் மற்றும் மக்கள் பயன்பெறுவார்கள் என எண்ணுகிறேன்.
நன்றி...
நன்றி செல்வ கணேஷ்.
ReplyDelete