கூனிப்பொடி (Krill)
‘மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது‘ என்பார்கள்.
(அட, நமக்கு எதற்கு மூர்த்தி, கீர்த்தி என்ற வடமொழிச் சொற்கள் என்று நினைப்பவர்கள், ‘உடல்சிறிது, புகழ்பெரிது‘ என மாற்றிப்
படிக்கவும்)
இந்த ‘உடல்சிறிது, புகழ்பெரிது‘ பழமொழிக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு கூனிப்பொடி. (Krill). நீந்தக் கூடிய மிகச்சிறிய இறால் இனம் இது. கால் அங்குலம்
முதல் இரண்டங்குல நீளம் கொண்ட இந்த சிற்றுயிர்களில் மொத்தம் 82 முதல்
85 வகைகள் உள்ளன.
பெருங்கடலின் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியின் ஒரு முதன்மைப் பெருங்கண்ணி
இந்த கூனிப்பொடிகள்தான். நீலத்திமிங்கிலங்கள் உள்பட பல்லற்ற பலீன்
வகை திமிங்கிலங்களின் முதன்மைப் பேருணவும் கூனிப்பொடிதான்.
திறந்த கடல்களில், ஆறாயிரத்து 600 அடி ஆழம்
முதல், கடல்பரப்பு வரை காணப்படும் இந்த சிற்றுயிர்கள்,
ஒரு கனமீட்டருக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை காணப்படலாம். ஒரு கனமீட்டர் நீரில்
20 கிலோ வரை கூனிப்பொடிகள் ஒன்றுகூடி மொய்க்கலாம். உருவில் சிறிதானாலும் இதன் திரட்சி காரணமாக கூனிப்பொடி கூட்டத்தால் சிறு கப்பல்களைக்கூட
வழிமறித்து நிறுத்த முடியும். மறபுறம் கடலோரத்தில்
சிறிய கொசுவலையை வீசும் சிறுவர் கூட்டத்திடம் சிக்கி அவர்களுக்கு உணவாகவும் கூனிப்பொடிக்
கூட்டத்தால் மாற முடியும்.
கூனிப்பொடிகள் இரவில் ஒளிரக்கூடியவை. 9 பருவங்களாக வளர்ந்து இறுதியில் முழு அளவை இவை எட்டக்கூடியவை.
No comments :
Post a Comment