வரிப்பாறை
(GOLDEN TREVELLY)
பளிச்சிடும்
பொன்மஞ்சள் வண்ணத்தால் மற்ற பாரை இன மீன்களில் இருந்து விலகி தனித்துவமாகத் தெரிவது
வரிப்பாரை. இதன் பொன்னிறமான உடலில் செங்குத்தாக 7 முதல் 12 வரிகள் ஓடும். கண்வழியாகவும்
ஒரு வரி ஓடுவது சிறப்பானது.
இதன்
தூவிகள் மஞ்சள் நிறத்தவை. தடித்த சதைப்பற்றுள்ள உதடுகள் இந்த மீனுக்குண்டு. இந்த வாயால்
இரையை இது உறிஞ்சவும் கூடியது. வால் நுனிகள் கறுப்பில் தோய்ந்தவை.
வரிப்பாரை
வளர வளர இதன் நிறம்மாறி வெள்ளிநிறமாகும். வரிகள் மங்கி மறைந்து திட்டுகளாக உருமாறும்.
வரிப்பாரைக்கு இளம்வயதில் வாயின் கீழ்த் தாடையில் பற்கள் இருக்கும். வளர்ந்தபின் பற்கள்
இருக்காது.
சிறு
வரிப்பாரை அம்மணி உழுவை, யானைத் திருக்கை, பெருஞ்சுறாக்களுடன் இணைந்து அவற்றின் அருகே
உடன்நீந்தி துணை வரும். இதனால் இதர பெரிய மீன்களின் ஆபத்தில் இருந்து இது தப்பும்.
சுறாக்களின்
அருகே அவற்றின் பார்வை படாத இடத்தில் வரிப்பாரை நீந்திவரும். அப்படியே கண்களில் பட்டாலும்
பெரிய மீன்களால் உடனே உடல் திருப்பி இவற்றைக் கடிக்கமுடியாது.
பெருமீன்களின்
மாங்குடன், அவை சிதறும் உணவையும் வரிப்பாரை உணவாகக் கொள்ளும். மீன்கள், சிறுநண்டுகள்,
இறால்களும் இதன் உணவு.
வரிப்பாரைக்கு
நிறைய வெளிச்சம் தேவை என்பதால் சூரியஒளி படரும் கடல்மேற்பரப்பையொட்டி இது வாழும். கூட்டமீனான
வரிப்பாரை ஒரு பார் மீன்.
அதிகாலையிலும்,
அந்திமயங்கும் வேளையிலும் இது உணவுண்ணும். வரிப்பாரை அரையடி முதல் இரண்டடி வரை வளரக்கூடியது.
செம்பாரை, பொடிப்பாரை என வரிப்பாரைக்கு வேறு பல பெயர்களும் உள்ளன.
No comments :
Post a Comment