தளப்பத்து
(மயில் மீன்)
ஈட்டி
போன்ற கூரிய மூக்கு, தலை முதல் வால்வரை படகு பாய் போன்ற பெரிய தூவி, அதிவேக நீச்சல்,
துள்ளல் பாய்ச்சல்….தளப்பத்து மீனின் அடையாளங்கள் இவை. 4 முதல் 8 அடி நீள மீன் இது.
SAIL
FISH என அழைக்கப்படும் தளப்பத்தின் இன்னொரு பெயர் மயில் மீன். இதன் பெரிய தூவியில்
எண்ணற்ற கரும்புள்ளிகள் அமைந்திருக்கும். மயில் மீன் என்று இது அழைக்கப்பட இதுவே காரணம்.
கீழ்ப்புற
முன்தூவிகள் இரண்டும் மெல்லிய நீளத்தூவிகளாக இருக்கும். வால் பிறை வடிவானது. வேகமாக
நீந்த உதவுவது.
தளப்பத்து
அதிவேகமாக நீந்தும்போது, இந்த தோகையை மடக்கி அதற்குரிய பள்ளத்தில் வைத்துக் கொண்டு
இன்னும் அதிவேகமாக நீந்தும். இரை மீன் கூட்டதைப் பந்தாகச் சுருளச் செய்து, கூர்மூக்கால்
அவ்வப்போது மீன்கூட்டத்தின் இரைமீன்களைக் காயப்படுத்தும்.
உதிர்ந்து
உயிரிழந்துவிழும் மீன்களை உணவாகக் கொள்ளும். திறந்த பெருங்கடல் பரப்பில் 50 ஆயிரம்
வரை முட்டைகளை இது இடும். நீர்ப்பரப்பில் மிதந்தலையும் தளப்பத்தின் முட்டைகளில் மிகச்சிலவே
மீனாக உருக் கொள்ளும்.
கொப்பரக்குல்லா (MARLIN)
தளப்பத்து
போன்ற இன்னொரு மீன் கொப்பரக்குல்லா. இந்த மீன், தலையில் மட்டுமே பெரிய குல்லா போன்ற
தூவியுள்ளது. இதன் தூவி வரவர சிறுத்து மறையும். ஆங்கிலத்தில் மர்லின் (MARLIN) என்று
அழைக்கப்படும் கொப்பரக்குல்லா, ஹெர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய கடலும் கிழவனும் நாவல் மூலம்,
கடல்மீன்களில் கதாநாயக அந்தஸ்து பெற்ற மீனாக உயர்ந்தது.
தளப்பத்து
மீனுடன் ஒப்பிடும்போது கொப்பரக்குல்லா நீளமானது. இந்த இரு வகை மீன்களுமே அதிவேகத்தில்
மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியவை.
SWORD
FISH என அழைக்கப்படும் வாள்மீன், (Xiphias gladius), தளப்பத்து, கொப்பரக்குல்லாவுடன்
சேராத தனி வகை மீன் ஆகும். இந்த மூன்று மீன்களையும் ஒன்றுடன் ஒன்று குழப்பிக் கொள்ளக்கூடாது.
No comments :
Post a Comment