களவா
பார்
மீன்களில் மிகப்பெரியது களவா (Grouper) களவாவில் பல இனங்கள். சில ஒரு மீட்டர் முதல் மூன்றேமுக்கால்
மீட்டர் நீளமுள்ளவை. 100 கிலோ முதல் 400 கிலோ நிறையுள்ள களவாக்களும் உள்ளன. சில களவாக்கள்
குட்டி கார் அல்லது குளிர்ப்பதன பெட்டி அளவுக்குப் பெரியதாக இருக்கும்.
களவா,
Sea bass எனப்படும் கொடுவாவுக்கு உறவுக்கார மீன். அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும்
களவா, கடலில் நீண்டதொலைவு அலையும் மீன் அல்ல. வேகமாக நீந்தும் மீனும் அல்ல.
பெரிய
மீனாக இருந்தாலும், கடலில் நீரோட்டம் அதிகமாக இருந்தால், நீரோட்டத்தைச் சமாளிக்க பாறையின் பின்னால் ஒதுங்கிக் கொள்ளும் மீன் இது.
அதனாலேயே பார்க்கடல் மீனாக களவா வாழ்கிறது. நீண்ட நேரம் வேகமாக நீந்தமுடியாது என்பதால்
இது திடீரென இரையை வழிமறித்து தாக்கி கொல்லும். இதன் வாய் பெரியது. ஒரே விழுங்கில்
சுறாவையோ, திருக்கையையோ களவா விழுங்க வல்லது. தூண்டிலில் சிக்கிய சீலாவையும் சில வேளைகளில்
ஒரே கடியில் இது கொண்டு போகக் கூடியது.
நண்டு,
இறால், கணவாய், மீன், ஆமைக்குஞ்சுகளையும் இது உணவாக்க வல்லது.
ஆண்டுக்கொருமுறை
முழுநிலா நாளில் களவா மீன்கள் ஒன்றுகூடும். இது வெளிவிடும் முட்டைகளை யானைத் திருக்கையும்,
இதர சிறுமீன்களும் விரும்பி உண்ணும். களவாயில் மிகப்பெரிய ஓரினத்துக்கு யூதமீன் என்றொரு
பெயர் உண்டு. பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர் யோனாவை விழுங்கிய மீன் களவா என்று நம்பப்படுவதால்
Jew fish என இது அழைக்கப்படுகிறது.
50
ஆண்டுகாலம் வாழக்கூடிய களவா மீன், நிறம் மாற வல்லது. பிறக்கும் போது பெண்ணாகப் பிறக்கும் களவா வயது முதிரும்போது ஆணாக மாற வாய்ப்புள்ளது. முதிர்ந்த ஆண்மீன் கொஞ்ச காலமே வாழும்.
இதனால் களவாக்களில் முட்டையிடும் பெட்டை மீன்கள்தான் அதிகம்.
களவாவில், ஒரே காலகட்டத்தில் ஒரே வேளையில் ஆணாகவும், பெண்ணாகவும் வாழும்
களவாவும் உண்டு.
பவழப்
பாறைகளில் பெண்மீன்களுடன் கூடிவாழும் ஓர் ஆண் களவா இறந்து போனால், அந்த பெண் களவாக்களில்
ஒன்று ஆணாக மாறி, கணவனின் இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.
களவாவும், அதன் உறவுகளான அழுவை, மூச்சா, மழுவன் மீன்களும் வழுவழுப்பான செதிள் கொண்டவை.
களவாவும், அதன் உறவுகளான அழுவை, மூச்சா, மழுவன் மீன்களும் வழுவழுப்பான செதிள் கொண்டவை.
No comments :
Post a Comment