வார்டிசிசம்
11. வார்டிசிசம்
இது குறுகிய காலமே வாழ்ந்த கலை இயக்கம். 1914 முதல் 1915 வரை ஓராண்டு காலமே இது ஆட்சி செலுத்தியது.
பிரிட்டிஷ் ஓவியர் வின்தாம் லூயிஸ் இந்த இயக்கத்தை வழிநடத்தினார். அடிப்படையில் அணுகுமுறையில் இது கிட்டத்தட்ட கியூபிசம் மாதிரியானது. ஆனால் இத்தாலிய பியூச்சரிசத்தின் செல்வாக்கு இதில் அதிகமிருந்தது. (இத்தாலிய பியூச்சரிசத்துக்கு இது அதிக அளவில் கடன்பட்டிருந்தது)
நவீன தொழில்மய சமூகம் வார்டிசிசத்தின் கருப்பொருளாக இருந்தது. பலமான ஜியோமிதி வடிவங்கள், இயந்திரமயமான அமைப்புகளில் வார்டிசிச ஓவியங்கள் படைக்கப்பட்டன.
இந்த ஓவியங்களில் இயக்க அசைவுகளும், சக்தியும் செறிந்திருந்தன.
பியூச்சரிச ஓவியர் போசியானி, அனைத்து கலை படைப்புகளும் உணர்ச்சி ததும்பிய வார்ட்டெக்சில் இருந்து உற்பத்தியாக வேண்டும் என்று ஒருமுறை அறிவிக்க, அதன் அடிப்படையில் வார்டிசிசம் என்ற பெயர் உருவானது.
வின்தாம் லூயிஸ் உருவாக்கிய வொர்க்சாப் (1914-15) என்ற ஓவியம், இந்த கலை இயக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டு.
No comments :
Post a Comment