பெருந்திரள் மீன்கள்
பெருந்திரள்
ஆர்ப்பாட்டம்.. அலைகடலென திரள்வீர்…
இதுபோன்ற
அறிவிப்புகளை நாம் அடிக்கடி
கேட்டிருப்போம். கடல்களைப் பொறுத்த
வரை, அங்கு பெருந்திரள் மீன்கூட்டங்கள்
அதிகம்.
இந்த மீன் திரளில்
மிகப்பெரிய கூட்டமாகத் திகழும்
மீன் அல்லது ஒருகாலத்தில்
திகழ்ந்த மீன் வெங்கணைதான்.
(Herring)
சாளை மீன்கூட்டம் |
வெங்கணை
அல்லது வெங்கணா என அழைக்கப்படும் இந்த வெள்ளிநிற, சிறிய, எண்ணெய்ச்சத்துள்ள
மீன் இனம் ஒரு காலத்தில் பெருங்கடல்களில்
பல மைல்கள் நீளத்துக்கு
கூட்டமாக பவனி வந்திருக்கிறது.
உலக அளவில் மிக அதிக அளவில்
பிடிக்கப்படும் மீன் இனமாகவும்
வெங்கணை விளங்கியிருக்கிறது. இன்னும்
சொல்லப்போனால், பிரிட்டன் போன்ற நாடுகள் பேரரசுகளாக, பிரமிக்கத்தக்க
வளர்ச்சியடைய இந்த வெங்கணை
மீன்களும் ஒருவிதத்தில் காரணம்.
வெங்கணை
Clupidea குடும்பத்தைச்
சேர்ந்தது. சாளை (Sardin), நெத்தலி (Anchovy) போன்ற மீன் இனங்களும் இந்த Clupidea
குடும்பத்தில் அடக்கம்.
வெங்கணையில்
ஒட்டுவெங்கணை சிறியது. இளவெங்கணை
நடுத்தரமானது. பெரு வெங்கணை
பெரியது. திரவெங்கணை இவற்றில் தனி ரகமானது.
கடலில் வெங்கணைக்கு அடுத்தபடி மிகப்பெரிய மீன்திரளாக
வலம் வருபவை சாளைகள்தான். (சாளை மீன்களைப் பற்றிய பதிவு நமது வலைப்பூவில் ஏற்கெனவே
உண்டு)
சாளைகளும் வெங்கணா போலவே எண்ணெய்ச்சத்துள்ள மீன்கள்தான்.
சாளைகளில் பல வகைகள். நெய்ச்சாளை, வெள்ளாமுரச் சாளை, பண்ணைச் சாளை என்பன அவற்றுள் சில.
சாளையைப் போலவே இன்னொரு பெருந்திரள் மீன் இனம் சூடை.
இந்தப் பெருந்திரள் மீன்கூட்டங்களில் அடுத்ததாக இடம்பெறத்தக்கது
நெத்தலி (Anchovy).
நெய்த்தோலி என்ற இந்த மீன் இனத்துக்கு கொழுமீன் என்ற
பெயரும் உண்டு. நெத்தலிகளில் ஏறத்தாழ 144 வகைகள்.
சிறிய உடல்கொண்ட நெத்தலி மீன்கள் வலையில் பட்டதுமே
எளிதில் அடிபட்டு இறக்கக் கூடியவை. திமிங்கிலம் போன்ற கடல் பேருயிர்களுக்கு மட்டுமின்றி
இதர மீன்கள், கடற்பறவைகளுக்கும்கூட நெத்தலிகள் இரையாகக் கூடியவை. நெத்தலியில் சிறியது
வெண்ணா.
பெருந்திரள் மீன்களில் நெத்தலிக்கு அடுத்தபடியாக பொருவா,
கோலா, குத்தா, கக்காசி, தோட்டா, காரல் மீன்களைக் குறிப்பிடலாம்.
இந்த வகை மீன்களின் பெருங்கூட்டம் இல்லையென்றால் கடல்
என்னும் கண்கவர் அருங்காட்சியகம் பெரும்பாலும் களையிழந்து போக வேண்டியிருக்கும்.
No comments :
Post a Comment