கறுக்காடி
(வற்றல் இறால்) (Pandalus borealis)
இறால்களில்
(Shrimp) மொத்தம் 2 ஆயிரம் வகைகள். இதில் சிவப்பு நிற மிளகாய் வற்றல் போல உள்ள ஒரு
சிறிய ரக இறாலுக்குப் பெயர் கறுக்காடி. சிறிதாக சிவப்பு வண்ணத்தில் இருப்பதால்
வத்தல் இறால் என்றும் இதைச் சொல்வார்கள்.
குளிர்நிறைந்த
ஆழக் கடல்களில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 364 அடி அல்லது 1330 மீட்டர் ஆழத்தில்
சகதிகளில் இந்த இறால் காணப்படும். மைனஸ் 8 டிகிரி சென்டிகிரேடு குளிரிலும் இந்த
இறால் இனம் வாழும்.
ஆண்
இறால்கள் நாலரை அங்குல நீளத்திலும், பெண் இறால்கள் ஆறரை அங்குல நீளத்திலும்
விளங்கும். பிறக்கும்போது ஆணாகப் பிறக்கும் இந்த இறால்கள், முதிரும்போது பெண்ணாக
மாறி இறக்கும். 8 ஆண்டுகள் உயிர் வாழும் கறுக்காடிகள், ஒன்று அல்லது இரண்டு வயதில்
பெண்ணாக மாறும். இறுதியில் இறக்கும்வரை பெண்ணாகவே இருக்கும்.
மனிதர்களின்
உணவாகக் கூடிய இந்த கறுக்காடியின் தோட்டில், சிட்டோசன் (Chitosan) என்ற
வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள், கறுக்காடி இறாலை, கைவிரலால் தொடும்போது,
விரல்களைக் கன்றிப்போக செய்யக்கூடியது. இந்த வேதிப்பொருள், காயங்களுக்கு
மருந்தாகவும், திராட்சைச் சாறை வடிகட்டவும், இயற்கை வேளாண்மையில் மண்ணுக்கு
வளமூட்டவும் பயன்படுகிறது.
கறுக்காடியின்
மெல்லிய தோடு, தொட்டவுடன் உடைந்து விடக் கூடியது.
சீனர்களால்
மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படும் கறுக்காடிக்கு கடல் அடி ஆழத்தில் கவுர் நுண்ணுயிர்களே
இரை. இந்த கறுக்காடிகளோ பன்னா மீன்களுக்கு அதிக அளவில் இரையாகக் கூடியவை.
No comments :
Post a Comment