ஒரண்டை (Powder blueSurgeon)
Acanthuridae குடும்பத்தைச் சேர்ந்த மீன்இனம் இது. சர்ஜன் (Surgeon) அல்லது டேங் (Tang) என அழைக்கப்படும் இந்த இன மீன்கள் பார்வைக்கு
நீள்வட்ட வடிவம் கொண்டவை. முதுகு மற்றும் அடிப்பகுதி வால் தூவிகள் வட்ட வடிவில் இருப்பதால்
இந்த வகை மீன்கள் நீள்வட்டவடிவில் தெரிகின்றன.
ஒற்றை முதுகுத் தூவி கொண்ட இந்த இன மீன்களின், வாலடிப்பக்கத்தின்
இருபுறமும் கூரிய கத்திபோன்ற முட்கள் மறைந்திருக்கும்.
சாதாரணமாக கண்களில் படாத இந்த கத்திகள், மீனை யாரும்
சீண்டினாலோ, அல்லது மீனைத் திடுக்கிட செய்தாலோ வெளிவரும். இதன் கத்திகள் பலத்த காயத்தை ஏற்படுத்தக்கூடியவை.
இதில் சிலவகை மீன்கள், வாலை ஒரு குலுக்கு குலுக்கி, அதன்மூலம் கத்தியை விரிக்கக் கூடியவை.
Acanthuridae
என்ற இதன் குடும்ப பெயர், வாலில் முள் கொண்ட மீன் என்ற பொருளில் சூட்டப்பட்ட பெயர்.
ஒரண்டை உள்பட இதன் குடும்பத்தைச் சேர்ந்த பலவகை மீன்கள்
கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்டவை. நன்கு சூரிய ஒளிபடரும் பார்க்கடலில் கூட்டமாக ஒழுங்கின்றி
திரியும் மாப்பு மீன்கள் இவை. அதோடு பாசியை மட்டுமே உண்ணும் சைவ மீன்கள் இவை.
பவழப்பாறைகள் செழித்து வளர சூரிய ஒளியும், உயிர்க்காற்றும்
தேவை. பவழப்பாறைகளில் பாசி படர்ந்தால் சூரியஒளி படாமலும், உயிர்க்காற்று கிடைக்காமலும் பவழப்பாறைகள் அழிய நேரலாம்.
இந்த நிலையில், ஒரண்டை இன மீன்கள், கத்தரி போன்ற சிறுபற்கள்
கொண்ட வாயால் பவழப்பாறைகளில் படர்ந்திருக்கும் பாசிகளை பக்குவமாக உண்ணக் கூடியவை. எனவே
இந்த இன மீன்களால் பவழப்பாறைகள் அழியாமல் தழைக்கின்றன. செழித்து வளர்கின்றன.
ஒரண்டை உள்பட சர்ஜன் இன மீன்கள் பொதுவாக பகலில் இரை
உண்டு இரவில் குகைகளில் தங்க கூடியவை. இந்த வகை மீன்கள் வாழ தெளிந்த நீரும், பார்களும்
தேவை.
சர்ஜன் (Surgeon) இன மீன்களில்
ஒரண்டை போன்ற மற்றொரு மீன் குரிசில் (Convict tang) கோழிமீன் எனவும் தமிழில் இது அழைக்கப்படுகிறது.
வரிக்குதிரை போன்ற வரிகள் கொண்ட மீன் இது. ஆப்பிரிக்க புல்வெளிகளில் வரிக்குதிரைகள் கூட்டமாகத் திரிவது போல கூட்டமாகத் திரியும் குரிசில்களில் ஒரு தனிமீனை இனம் கண்டு பெரியமீன் ஒன்று இரையாக்குவது கடினம். அந்த அளவுக்கு குரிசில்களின் கூட்டம், பெரிய கொல் மீன் ஒன்றின் கண்களைக் குழப்பி விடக் கூடியவை.
வரிக்குதிரை போன்ற வரிகள் கொண்ட மீன் இது. ஆப்பிரிக்க புல்வெளிகளில் வரிக்குதிரைகள் கூட்டமாகத் திரிவது போல கூட்டமாகத் திரியும் குரிசில்களில் ஒரு தனிமீனை இனம் கண்டு பெரியமீன் ஒன்று இரையாக்குவது கடினம். அந்த அளவுக்கு குரிசில்களின் கூட்டம், பெரிய கொல் மீன் ஒன்றின் கண்களைக் குழப்பி விடக் கூடியவை.
சர்ஜன் (Surgeon) என மீன்கள்
பொதுவாக முக்கால் அடி நீளம் இருக்கலாம். சில ஓரடி நீளம் வரை இருக்கலாம்.
மஞ்சளும் கறுப்புநிற வரிகளும் கலந்த மீன் இது. முகத்திலும்
உடலின் நடுப்பகுதியிலும் வாலிலும் 3 கரும்பட்டைகள் கொண்ட மீன் வண்ணாத்தி. இதன் கரும் பட்டைகளுக்கு
இடைப்பட்ட பகுதிகள் வெள்ளையும் மஞ்சளுமாகத் திகழும். வண்ணாத்தியின் வாய் குழாய் போன்று
முன்புறம் துருத்திக் கொண்டிருக்கும். கண்களுக்கு மேலே கொம்பு போன்ற ஒன்று நீட்டிக்
கொண்டிருக்கும். கீழ்த்தாடை கறுப்பாகவும், மேல்தாடையும் முகத்தின் பெரும்பாகமும் வெள்ளையாகக் காணப்படும். முதுகுத் தூவியும், கீழ்ப்புற வால்பக்கத் தூவியும் பின்னோக்கி சரிந்திருக்கும்.
சர்ஜன் (Surgeon) என மீன்களில்
இன்னொரு வகை மீன் ஒருகோட்டு மீன் எனப்படும் ஒற்றைக்கொம்பு மீன். (Unicorn (Naso) தலையில்
ஒரு
கொம்பு உள்ள இந்த மீனுக்கும்
கத்திகள் உண்டு. ஆனால் கத்திகளை இந்த மீனால் அசைக்க முடியாது.
No comments :
Post a Comment