பா நண்டு
இந்த நண்டின் பெயர் பா நண்டு. பசுமை
நிற நண்டு என்பதால் பாநண்டு என அழைக்கப்படுகிறது. இதனிலும் சிறிய
இளம்பருவ நண்டு கருவாலி நண்டு என அழைக் கப்படுகிறது.
பா நண்டு |
பா நண்டு
வேகமாக ஓடக்கூடியது. கடற்கரைகளில் ஆழக்குழி தோண்டி வசிக்கும் இயல்புடையது.
ஆகவே குழிநண்டு என்ற பெயரும் இதற்கு உண்டு. உணவுக்காகவும், தூண்டில் இரையாகவும் மீனவர் கள் இதைப் பயன்படுத்துவார்கள். துவையல் அரைத்து உண்ண இது மிகவும் சுவையான நண்டு.
தூண்டில் இரையாக இந்த நண்டைப் பயன்படுத்தினால், தூண்டில் முனையில் உள்ள இரை அவ்வளவு எளிதில் கழிந்து போகாமல், நீண்டநேரம் மீன்பிடிக்க உதவும். எனவே மீனவர்கள் மற்ற
எல்லா நண்டுகளையும் விட பா நண்டையே மிகவும் விரும்பிப் பிடித்துத் தூண்டில் இரையாக
ஏற்பார்கள்.
No comments :
Post a Comment