தேளி (இருங்கெழுது)
(plotosus Canius)
கெளிறு இன மீன்களுக்கு கெழுது, கெழுத்தி என திசைப்பெயர்கள் அதிகம், பூனை போன்ற மீசை இருப்பதால் ஆங்கிலத்தில் கெழுதுக்கு Cat fish என்பது பெயர்.
கெழுது இன மீன்களில் ஒரு பிரிவான தேளியை, Ell tail catfish வகைகளில் ஒன்றாகக் கருதலாம். இந்தியப் பெருங்கடலைத் தாயகமாகக் கொண்ட மீன் தேளி.
நச்சு முள்கள் கொண்ட கெழுது இன மீன்கள் பொதுவாக வரிகலந்த வண்ணங்களுடன் இருப்பதில்லை. ஆனால், தேளிகள் அதற்கு விதிவிலக்கு.
இந்தத் தேளிகளில் ஒன்று இருண்ட கருஞ்சாம்பல் நிறம் கொண்ட தேளி. இதன் உடல் வரிக் கோடுகள் பகலில் தெரியாது. இரவில் தெரியலாம்.
இதன் மீசைகள் கண்களைத் தாண்டியும் நீளமானவை. மீசையால் கடல்தரையைக் கிளறி இது இரைதேடக்கூடியது.
இதன் முதுகிலும், அடியிலும் தூவி
உண்டு. முதுகுப்பின் தூவியும், அடிப்புறப் பின்தூவியும் நீண்டு சென்று வால்தூவியுடன் ஒன்றரக் கலந்து முடியும்.
தேளி மீன் நஞ்சுள்ளது. இதன் முதுகு மற்றும் பக்கத்தூவிகளில் உள்ள முட்கள் நஞ்சுப்பையுடன் இணைந்திருப்பவை. பிடிப்பவர்களின் கைகளைக் குத்தி நஞ்சை செலுத்த வல்லவை.
தேளி உண்ணத்தகுந்த மீன்.

No comments :
Post a Comment