Tuesday, 22 December 2015

நண்டுகள்



சிங்கி நண்டு, ஆமை நண்டு, ஆத்து நண்டு, முக்கண்ணன் நண்டு, மூன்று புள்ளி நண்டு, தொப்பி நண்டு, செம்மண் நண்டு, புளியமுத்து நண்டு (பிஸ்கட் நண்டு), தவிட்டு நண்டு, கொட்டநண்டு, நீலக்கால் நண்டு (இறாலுடன் வரும், பெண் நண்டு சாம்பல் நிறம்), நீல நண்டு, குருஸ் நண்டு (சிலுவை நண்டு), பச்சை நண்டு, பஞ்சு நண்டு, பார் நண்டு, பாசி நண்டு, கோரப்பாசி நண்டு, ஓட்டு நண்டு, செங்கா(ல்) நண்டு (செங்கல் நிறக்கால், மிதந்து வரும்), கிளி நண்டு, கல்நண்டு, முக்கு நண்டு (முள்ளுநண்டு), உள்ளி நண்டு (முள்போலக் குத்தும்), கடுக்காய் நண்டு (சிறிய நண்டு, முதுகில் பச்சை நிறம், எளிதில் சாகாது), கழிநண்டு (சேற்று நண்டு), கருவாலி நண்டு (பா நண்டு, வேகமாக ஓடும்), ஓலைக்காவாலி நண்டு, நட்டுவாக்காலி நண்டு, கொழக்கட்டை நண்டு, குழிநண்டு, சிப்பி நண்டு, சிவப்பு நண்டு, சீனி நண்டு, பொட்டை நண்டு, துறவி நண்டு (முனிவன் நண்டு), செம்பாறை நண்டு (சிறியது), பேய் நண்டு.

Tuesday, 24 November 2015

முரல்

946. வடிக்கிலி முரல் (வடுக்கிளி முரல்), 947. வாழியபோதல் முரல், 948. வாளையா முரல் (வாளா முரல்),949. வரயி முரல், 950. கருமுரல், 951. பிள்ளை முரல், 952. கோழியா முரல், 953. பாம்பு முரல், 954. செல்ல முரல், 955. இரங்க முரல், 956. கலிங்க முரல், 957. பைத்தங்கா முரல், 958. நெடுமுரல், 959. பாசிமுரல், 960. பாச்சுவலை முரல், (சிறியது, விரல் தடிமன் உள்ளது),
961. முயல், 962. முலைகுயன்,
முட்டி
963. அண்டி முட்டி, 964. கத்தாளை முட்டி, 965. குறுமுட்டி, 966. செம்ப முட்டி,
967. முள் இடுக்கி, 968. முள்ளங்கரா, 969. முறுத வாழி, 970. மூச்சா, 971. புள்ளி மூச்சா, 972. கறுப்பு மூச்சா, 973. மூலன், 974. மூஞ்சான், 975. மேலாடி, 976. மையாப் பொடியான், 977. மைலாப்புயன், 978. மொந்தன், 979. மோகா, 980. மோதமீன், 981. மோர மீன், 982. மோளா,
விடுபட்ட மீன்கள்

983. பாரையில் கும்பிளாப் பாரை, 984. நச்சுப்பாரை, 985. கிளாத்தியில் மஞ்சள் கிளாத்தி, 986. உல்லத்தில் கடுக்கா உல்லம், 987. அரல், 988. அனுவம், 989. அயிங்கவலை, 990. ஆனதும்பி, 991. குழுவி, 992. சேனான், 993. முரலில் படுக்கா முரல், 994. கூரைமேதல் முரல், 995. தடு முரல், 996. தொண்டையில் கரத் தொண்டை, 997. சுறாவில் கொண்டையன் சுறா, 998. வேடக்கொம்பன், 999. கொள்ளி, 1000. ராட்டு மீன்.

Saturday, 21 November 2015

நவரை

878. வரிநவரை, 879. கல் நவரை, 880. கண் நவரை, 881. செந்நவரை, 882. வெண்நவரை, 883. ரோமியா நவரை,
நவரை (Mullet)
பார்க்கடல் அருகே காணப்படும் சகதிமீன் இது. நவரையில் ஏறத்தாழ 50 இனங்கள் உள்ளன. இதன் தாடைக்குக் கீழே நீளமான தாடி போன்ற இரண்டு உறுப்புகள் இருக்கும். மீனின் முன்புறமோ, அல்லது கீழ்ப்புறமாகவே நவரையால் இந்த உறுப்புகளை நீட்ட முடியும். கடலடி சகதியைக் கிளறி இரையை ஆராய பார்பெல்ஸ் எனப்படும் இந்தத் தாடி பயன்படுகிறது.
இந்த ஆட்டுத்தாடி காரணமாக நவரை மீன் ஆங்கிலத்தில் கோட் பிஷ் (Goat Fish) என அழைக்கப்படுகிறது. தாடியை வைத்து நவரையை எளிதாக அடையாளம் காணலாம்.
தேவையில்லாதபோது இந்தத் தாடி நவரையின் அடிப்புற உடலோடு ஒட்டிக் கொள்ளும். பிறகு இந்தத்தாடியை நாம் காண்பது கடினம்.
நவரையின் பல இனங்கள் பிங்க் நிறமானவை. இது நிறம்மாறக்கூடிய மீன். வியப்படையும் போது நவரை சிவப்பாகக்கூட ஆகும். அடர்த்தியான அழுத்தமான புள்ளிகள் கொண்ட ஒரு நவரை, திடீரென உடலில் கோடுகளோ, புள்ளிகளோ இன்றி வெறுமையாகக் காட்சியளிக்க வாய்ப்புள்ளது.
நவரையின் முதுகு முன் தூவி முள்கள் உள்ளது. முதுகுப் பின்தூவி முள்களற்று மென்மையானது. இரு தூவிகளுக்கும் இடையே இடைவெளி உண்டு.
நவரைகளில் சில கூட்டமீன்கள். சில தனித்து வாழக்கூடியவை. நவரையில் ஓரடிக்கு அதிகமான மீன்களும்,10 அங்குல மீன்களும் உள்ளன.
நவரையில் புள்ளி நவரை ரோசா நிறமானது. உடலின் பக்கவாட்டில் அழுத்தமான 3 திட்டுகள் இருக்கும்.
நவரையில் செந்நவரை மேலே செந்நிறமாகவும், இருபுறமும் மஞ்சள் கலந்து 2 வரிசைகளாக நீலப்புள்ளிகளுடன் காணப்படும்.
ரெட்சர் முல்லட் எனப்படும் இன்னொரு ரக செந்நவரை, நவரையின் இயல்புக்கு மாறாக அடர்ந்த கூட்டமாகத் திரியக்கூடியது.
மஞ்சள் நவரை, வெள்ளை அல்லது வெள்ளி நிறமானது. இதன் மூக்கில் தொடங்கி கண்வழியாக உடல் முழுவதும் மஞ்சள் நிற கோடு ஓடும்.
நகரை என்பது மற்றொரு தனிமீன் இனம்.

884. நகரை, 885. நாக்கு மீன், 886. புள்ளி நாக்குமீன், 887. நாக்கண்டம், 888. நெடு நாக்கண்டம், 889. பாரி நாக்கண்டம், 890. நாறல், 891. நீற்றுக்கவலை, 892. நுணலை (கொய்மீன்), 893. நெடுமீன், 894. நெய்மீன், 895. நெடும்புலி, 896. நெத்தி (பயிந்தி இனம், முள் குத்தினால் கடுகடுக்கும்), 897. நெத்தி பிரியன்,
நெத்தலி (நெய்த்தோலி)
898. கருநெத்தலி (குமரிக்கடலில் மட்டுமே கிடைப்பது), 899. பெருவா நெத்தலி, 900. வெள்ளை வால் நெத்தலி, 901. வெண் நெத்தலி, 902. உருளை நெத்தலி, 903. சிறுகை நெத்தலி, 904. கோவா நெத்தலி (மேலைக்கடலில் மட்டுமே கிடைப்பது), 905. நெடுவா, 906. கறுப்பு நெடுவா, 907. நெய் மஞ்சளா, 908. நெடுங்கவலை, 909. நெடும்பீலி, 910. நெடுந்தலையன், 911. நெளியன், 912. நெய்க் கோமாரியன், 913. நொன்னா, (நுண்ணா, தும்பு அளவுக்குச் சிறிய வெள்ளைநிற பொடிமீன், கையில் தடவித்தான் எடுக்க முடியும்), 914. நொறுக்கி, 915. நொனாலி, 916. நொய், 917. மஞ்சள் பழம், 918. மஞ்சள் கட்டா குட்டி,
மதனம்

919. மஞ்சள் மதனம், 920. கருமதனம், 921. பாசி மதனம், (மகளை விற்று மதனம் வாங்கி சாப்பிடு என்பது தூத்துக்குடி பழமொழி), 922. மகவுப் பிலால், 923. மட்டகுந்தான் ( வெள்ளியா), 924. மட்லீசி, 925. மடந்தை, 926. மாந்தேவி, 927. மடவுள்ளி, 928. மடவை, 929. மயிலை, 930. மாணை (இதன் இரு சினைகளும் சுவை மிக்கவை), 931. மணலை, 932. மண்ணா, 933. மணங்கு, 934. மருவா, 935. மகரை (மசரை, மசறி), 936. மசவு, 937. மத்தி, 938. மதுரமீன், 939. மதுரம், 940. மழுவம், 941. மலங்கு, 942. மாவலாசி (வஞ்சிரம்), 943. மாவுளா (பெருங்கண்சீலா, பெருக்கஞ்சீலா), 944. வரி மாவுளா, 945. மிடாக்கா

Friday, 20 November 2015

 வாளை
828. துப்பு வாளை, 829. முள்ளு வாளை, 830. முய(ல்) வாளை, 831. கார்த்திகை வாளை, 832. கரை வாளை, 833. கலக்கு வாளை (பச்சை முதுகு), 834. தேத்து வாளை (தேத்து நீரில் அதாவது தெளிந்த கடல்நீரில் இருக்கும் வாளை), 835. சுண்ணாம்பு வாளை, 836. சோனக வாளை, 837. கிளவாளை (சூரை இனம்), 838. பூவாளை, 839. ஓலை வாளை, 840. அம்பட்டன் வாளை (சொட்டை வாளை), 841. பண்டு வாளை, 842. பவள வாளை, 843. நாவி வாளை, 844. மண்டி வாளை, 845. இலக்கு வாளை, 846. கொழு வாளை, 847. குண்டங் கொழுவாளை, 848. கன்னங்கொழுவாளை,
வாவல் (வவ்வால்)
849. ஐய் வாவல், 850. வெள்ளை வாவல், 851. கருவாவல், 852. மூக்கரை வாவல், 853. சிரட்டை வாவல்,
854. வாமுட்டான் (உருளை மீன்), 855. வாய்நாறி, 856. விராலி,
விளமீன்
857. பருத்த விளமீன், 858. ஒரியா விளமீன் (நீண்டமுகம்), 859. கருணா விளமீன். 860. தாடி விளமீன் (கன்னத்துப்பக்கம் பொட்டு உண்டு),
861. விலாங்கு, 862. வியாலா, 863. வெக்கட்டை, 864. வெங்கண்ணி (உல்லம்),
வெங்கணா (வெங்கணை)
865. திரவெங்கணை, 866. இளவெங்கணை, 867. பெருவெங்கணை (பருவெங்கணை), 868. ஓட்டு வெங்கணை (முள் நிறைந்தது),
869. வெள்ளியா, 870. உருண்டை வெள்ளியா, 871. கறுப்பு வெள்ளியா, 872. வெளிச்சி, 873. வெள்றா (சீலாவில் ஓரினம்), 874. வெம்புலியன், 875. வொரண்டை, 876. நங்கல் குட்டி

Thursday, 19 November 2015

771. பாலமீன், 772. பார்மீன், 773. பாப்பர மூஞ்சான், 774. பார் உறிஞ்சான் (வாலில் முள் உண்டு), 775. பில்லரிஞ்சான், 776. பிழிஞ்சான் (சீலா), 777. பிலாச்சை, 778. பில்லிஞ்சான், 779. புள்ளிக் கரையான், 780. புனா (புனாக்கள்ளி), 781. புள்ளியாரை, 782. புளியமீன், 783. பூட்டான் கிளி, 784. பூவாளி, 785. பூலை (ஓராவில் பெரியது. வால் முள் குத்தினால் மட்டுமே வலிக்கும்), 786. சாணரப் பூலை, 787. நெடும்பூலை, 788. விரி பூலை, 789. பூமீன் (கொழஞ்சான்), 790. பூச்சக்கண்ணு, 791. பூண்டு சுரிங்கா, 792. பெருவரை மீன், 793. பேத்தை
பேத்தா
794. முள்ளுப் பேத்தா (பலாச்சி), 795. நஞ்சுப் பேத்தா, 796. குருவிப் பேத்தா,
797. பொத்தி, 798. பொத்தை, 799. பொய்க்குட்டி, 800. பொய்க்கம், 801. பொடுவா, 802. செம்பொடுவா, 803. பொறுவா, 804. அடுப்புப் பொறுவா, 805. பொட்டிட்ட மீன், 806. பொள்ளல், 807. பொன்னார மீன், 808. பொன்னெலி, 809. பொரிவாயன்,
போளான்
810. மஞ்சப்போளான், 811. வெள்ளைப் போளான், 812. யாவை, 813. லோமியா (பார் விட்டு தாழ்ந்த மீன்), 814. வஞ்சிரம், 815. வங்கராச்சி, 816. வங்கரவாசி, 817. வஞ்சனம், 818. வண்ணாத்தி,
வங்கடை

819. ஆழியா வங்கடை, 820. இரை வங்கடை (வயிற்றில் எப்போதும் கூனி, நெத்தலி போன்ற இரை இருக்கும்), 821. வரையோடு (பாரை மாதிரியான மீன்), 822. வட்டா, 823. வத்தை, 824. வழியோடு, 825. வழுக்கு மீன், 826. வறுமீன், 827. வட்டக்கண்ணி,

Wednesday, 18 November 2015

பன்னா


677. புள்ளிப்பன்னா, 678. கரும்பன்னா, 679. குழிப் பன்னா, 680 வாணியம் பன்னா, 681. தண்ணீர் பன்னா (நாக்கண்டம், பார் சகதியில் திரியும் மீன், வாலில் கறுப்புநிறம் உண்டு), 682. தண்டிப் பன்ன, 683. பில்லிப் பன்னா,
684. பன்னா மீன் (கறுப்பு வெளிர்மஞ்சள் நிறம்), 685. பன்னிமீன், 686. பன்னிச் சாத்தான், 687. பன்னி கடார், 688. பலாங்கம், 689. பரவை, 690. பஞ்சலை, 691. பாலை (வெள்ளை நிறம், கட்டிக்காளா மாதிரியான மீன். ஆனால் மீசையிருக்காது), 692. பார் முட்டான்,
பாரை 
693. வட்டப்பாரை, 694. மஞ்சப்பாரை, 695. கள்ளப்பாரை, 696. வத்தப் பாரை, 697. மஞ்சவேலா பாரை, 698. மண்வேலா பாரை, 699. மஞ்சள்கண்ணிப் பாரை, 700. மஞ்சள்கிள்ளுப் பாரை, 701. கருங்கண்ணிப் பாரை (பெரியது), 702. தூவிப் பாரை, 703. கொழுவப்பாரை, 704. ஓச்சாம்பாரை 705. ஓட்டா(ப்) பாரை, 706. ஓரன் பாரை, 707. இளம்பாரை, 708. தேங்காய்ப் பாரை, 709. சுக்கான் கண்ணிப்பாரை, 710. சுக்கான் கீரிப்பாரை, 711. நெத்தம் பாரை, 712. செம்பாரை, 713. உளவுப்பரை, 714. இராப்பாரை, 715. நீலப்பாரை, 716. நீலமூக்குப் பரை, 717. நீள்மூக்குப்பாரை, 718. தங்கப்பாரை, 719. குஞ்சவால்பாரை, 720. குமரப்பாரை, 721. தோல்பாரை, 722. வங்கரைப் பாரை, 723. புள்ளிப் பாரை, 724. எலிமீன்பாரை (கைக்கொழுவை), 725. வத்தலாம் பாரை, 726. குன்னிப்பாரை (கூனிப்பாரை), 727. வங்கடப்பாரை, 728. வலங்கம் பாரை, 729. வாமுட்டான் பாரை, 730. முசுக்கம் பாரை, 731. கேழல் பாரை, 732. செஞ்சட்டாம் பாரை, 733. செங்கட்டாம்பாரை, 734. செங்கடா பாரை (முதுகில் மஞ்சள்நிற படர்வு உண்டு), 735. கண்டாங்கிப் பாரை, 736. கடுவன் பாரை, 737. கட்டாம் பாரை, 738. மண் பாரை, 739. கல்லுப்பாரை, 740. கலங்கொட்டிப் பாரை, 741. கருந்தலைப் பாரை, 742. கவப்பாரை, 743. கருங்கப் பாரை, 744. நற்பாரை, 745. காற்கரைப் பாரை, 746. குமிழிப் பாரை, 747. தோட்டாம்பாரை, 748. தோ பாரை, 749. கின்னட்டிப் பாரை, 750. கீச்சாம்பாரை,. 751. சீவப்பாரை, 752. முண்டக்கண்ணன் பாரை, 753. லோமியாப் பாரை, 754. பில்லிப்பாரை, 755. பொரமீன் பாரை, 756. முண்டம் பாரை, 757. தாளம் பாரை, 758. தொல்லம் பாரை, 759. அச்சுப்பாரை, 760. கருக்குவாய்ப் பாரை, 761. புங்கம்பாரை, 762. சூவப் பாரை, 763. கொச்சம் பாரை (அயலை இனம்), 764. லேனா பாரை (சீலா போன்றது), 765. வட்னிப் பாரை, 766. கில்லிசைப் பாரை, 767. முட்டைப் பாரை, 768. மாமியாம் பாரை, 769. மண்டப் பாரை, 770. தீராப் பாரை (காரையை எண்ணினாலும் பாரையை எண்ண முடியாது என்பது பழமொழி).

Tuesday, 17 November 2015

தேளி  
624. கூழ்தேளி, 625. வெள்ளைத் தேளி, 626. கறுப்புத் தேளி, 627. மஞ்சள் தேளி, 628. தேரா (தோல்பாரை) 629. தேத்தா, 630. தேவா, 631.தேரவம், 632. தேறகம், 633. தேந்தலை, 634. தேடு (கெழுதில் மிகப்பெரியது தேடு)
தொண்டன்
635. குறுந்தொண்டன், 636. சல்லித்தொண்டன், 637. ஈக்குத் தொண்டன்,
தொண்டை
638. வெண் தொண்டை, 639. கருந் தொண்டை, 640. பனந்தொண்டை, 641.
குறுந்தொண்டை, 642. கோத்தொண்டை, 643. ஈக்குத் தொண்டை, 644. தொப்பை (கூராக்கெண்டை), 645. தொந்தன்
தோட்டா
646. கருவாலன் தோட்டா, 647. கருவத் தோட்டா, 648. தாடித் தோட்டா, 649. மீராக்கைத் தோட்டா, 650. சென்னாத் தோட்டா (சென்னித் தோட்டா), 651. குணாத்தோட்டா, 652. தோலை, 653. தோகை, 654. தோக்கரா, 655. தோலன் (கருந்தோலன்), 656. வெள்ளைத் தோலன், 657. தோவரை, 658. தோவியாரை, 659. படங்கன், 660. படம்பு, 661. படிச்சான் சம்பு, 662. பறந்தான், 663. பட்டான் சுக்கான் மீன், 664. பல்வக்கை, 665. படுக்கா மீன், 666. பருத்தி
பயிந்தி
667. புள்ளிப்பயிந்தி, 668. வெள்ளைப் பயிந்தி, 669. ஓலைப்பயிந்தி (பாசிச் செடிப் போல நாற்றம் அடிக்கக்கூடியது), 670. கோட்டுப்பயிந்தி (வரிப்பயிந்தி), 671. கரும்பயிந்தி (கொம்புப் பயிந்தி), 672. திரளைப் பயிந்தி (இதன் சதை பஞ்சுபோல ருசியாக இருக்கும்)
பண்டாரி
கொடுவா இனத்தைச் சேர்ந்த பண்டாரி மீன் நீள உடலும், சற்றே சரிந்த வாயும் கொண்டது. இதன் மேல்தாடை கண்களுக்கு மேல் வரை ஓடும்.
பாரமுண்டி என்பது இதன் பொதுவான பெயர். இது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் சூட்டிய பெயர். பெரிய செதிள்கள் கொண்ட ஆற்றுமீன் என்று இதற்குப் பொருள். மலையாளத்தில் இந்தமீன் களஞ்சி என்றும், சிங்களத்தில் மோத்தா என்றும் அழைக்கப்படுகிறது.
பண்டாரி மீன்களில் பெரிய மீன் தன் இனத்தைச் சேர்ந்த குட்டி மீன்களைத் தின்னும், குட்டி மீன்கள் கடலில் உள்ள கவுர்களை உணவாக்கிக் கொள்ளும்.

பண்டாரி

673. சிவப்புப் பண்டாரி, 674. வெள்ளைப் பண்டாரி, 675. பறளா, 676. பரலி, 

Sunday, 15 November 2015

சூரை
569. எலிச்சூரை, 570. கரைச் சூரை, 571.  நீலச்சூரை, 572. கீழைச் சூரை, 573. வரிச்சூரை, 574. மஞ்சள் சூரை
575. சூவாரை, 576. செம்மீன் (லோமியாவை விட பெரியது. செப்பிலியை விட சிறியது), 577. செவ்வளை, 578. செவ்வா மீன், 579. செம்பரா, 580. சென்னாகுன்னி,
செப்பிலி
581. நா செப்பிலி, 582. கொண்டைச் செப்பி (நெற்றியில் கொண்டை போன்ற புடைப்பு உண்டு)
583. செப்பல், 584. செங்கனி (செங்கண்ணி), 585. செவ்வாய், 586. செம்பொடுவா,
587. செரையா, 588. நரிமீன் செரையா, 589. செத்தை புள்ளிச் செத்தை, 590. புல் செத்தை, 591. சேவல் மீன் (சாவல்கோழி, சாமீன்), 592. சேத்தல், 593. சேரி (வெள்ளைக்குறி மீன்போன்றது. .அதைவிட பெரியது. மஞ்சள் நிறமும், அணில் போல கோடுகளும் உள்ளது), 594. சேதி, 595. சேனான், 596. சொம்படக்கான், 597. தளப்பத்து (கொப்பரக்குல்லாவுக்கு இருப்பதுபோல பாய்ச்சிறகு இல்லை. தலை முதல் வால்வரை சிறகுத் தூவி உண்டு. நீளம் குறைவு)
598. தலைக்களவாய், 599. தம்பான், 600. தரட்டை, 601. தலவா, 602. தவணாரை, 603. தள்ளி, 604. தத்தி (கெழுது இனம், ஊசிவாய்), 605. தளமீன், 606. தாளான், 607. தாழக்கோலா (செம்பொடுவா),

608. திரவி, 609. திரளி, 610. திமிளி, 611. திரியா, 612. திரவங்கணை (வெங்கணா போன்றது, கை அகலம் உடையது), 613 திரவாலை (வெளிர்ப்பச்சை நிறமானது), 614. தீரா (தோல்பாரை), 615. தீராங்கன்னி, 616. தீரா பாரை, 617. தீக்குச்சி மீன், 618. தும்பையன், 619. தும்பி (தும்பை), 620. தைலி, 621. தெரளக்குட்டி, 623. தெள்ளல்,

Wednesday, 11 November 2015

501. சம்பான், 502. சலவாழைக்காய், 503. சவரன், 504. சரமீன், 505. சரள், 506. சவளம், 507. சல்லி, 508. சதை மீன், 509. சள்ளை மீன் (பரடி மீன், செல்வேல், 510. சப்பரே, 511. சாத்தான், 512. சாத்தானி மிடாக்கா,
சாளை
513. ஒழுகு சாளை, 514. பூச்சாளை (தலை முதல் வால்வரை ஒரே அளவாக இருக்கும்), 515. பேச்சாளை (சிறிய வால், எண்ணெய் நாற்றம் உள்ள மீன்), 516. கறுப்புச்சாளை (நச்சாளை), 517. கன்னஞ்சாளை, 518. பறவைச் சாளை (பரவை சாளை), 519. செவிட்டுச் சாளை, 520. மாங்காய்ச்சாளை, 521. கீரிமீன் சாளை, 522. தடிக்கீரி சாளை, 523. கொழுவச் சாளை, 524. கொழி சாளை, 525. தொழுவன் சாளை, 526. ஊசிச்சாளை, 527. வட்டச்சாளை (சூடை), 528. மேலா சாளை (சாளையில் பெரியது)
529. சாவாளை (அருகி விட்ட மீன்), 530. சாரல், 531. சிரையா, 532. சிங்கானா, 533. சிலந்தன், 534. சிமிழி, 535. சீந்தி, 536. மஞ்சள் சீந்தி, 537. சீத்தலா, 538. சீப்பு மீன், 539. சீப்புத் திரட்டை, 540. சீனாவாரை, சீடை
சீலா
541. கட்டிச் சீலா, 542. மானா சீலா, 543. நெடுஞ்சீலா, 544. நெட்டையன் சீலா (அறுக்குளா), 545. நெடுந்தலை சீலா, 546. ஓரே சீலா, 547. தடியன்சீலா, 548. புள்ளிச்சீலா (மவுலடி), 549. நெய்ச்சீலா, 560. கல்சீலா
561, சுங்கான் (சுக்கான்), 562. சுங்கனி (கெழுது), 563. சூடை தங்கான்
சூடை

564. வெள்ளைச் சூடை, 565. கறுப்புச்சூடை, 566. மட்டிச்சூடை, 567. வட்டச்சூடை, 568. பேச்சூடை

Thursday, 5 November 2015

கெண்டை
454. கூராக் கெண்டை, 455. பால் கெண்டை, 456. கோலா கெண்டை, 457. துள்ளு கெண்டை, 458. மாராங் கெண்டை, 459. மூரன் கெண்டை, 460. செவ்வாய்க் கெண்டை, 461. வெள்ளிக் கெண்டை, 462. முண்டு கெண்டை
463. கௌக்கி, 464. கேரா மீன் (கேரை) (ரத்தச்சிவப்பு சதை, பன்றிபோல தோல் உண்டு.) 465. கேலம் (கொம்பன்சுறாவின் இன்னொருபெயர்), 466. கைக்கொளுவை, 467. கொய்மீன் (நுணலை),
 கொடுவா (பைனி),  
468. நரிக் கொடுவா, 469. கொறுக்கைக் கொடுவா,

470. கொடுவை, 471. கொப்பரக்குல்லா (கறுப்புநிறம், தளப்பத்து மீனைவிட நீளம் அதிகம், தலையில் சிறுதூவி உண்டு), 472. கொறுக்கை, 473. கொள்ளுக் களவாய், 474. கொட்டிலி, 475. கொப்பரன், 476. கொடும்புளி, 477. கொண்டான் பிலால் (சுறா), 478. கொண்டை செவ்வாளை, 479. கொண்டல் (கண்டல்), 480. கொதளிக்குட்டி (விளமீனில் சிறியது, தூண்டிலில் சிக்குவது, ஆடாங் கொதளி), 481. கொதலி, 482. கொங்கணியான், 483. கொழஞ்சான் (ஓலைபோல வதங்கி விழும். முள் அதிகம், நாள்பட்ட மீன்போலத் தோன்றினாலும் குழம்பில் போட்டால் சுவையாக இருக்கும்), 484. கொடும்புலி, 485. கோழிமீன் (முள் உள்ள மீன்), 486. கோலா, 487. கோளை, 488. கோலக் கீச்சான், 489. கோழியான் அவரை, 490. கோவாஞ்சி (கோவிஞ்சி), 491. கோப்பையன், 492. கௌக்கி, 493. கெடுத்தல் (முள் உள்ளது), 494. கௌவாலன், 495. சடையன், 496. சஞ்சோன், 497. சட்டித்தலையன், 498. சங்கரா, 499. சண்டுமணலை, 500. சலம்தின்னி

Monday, 2 November 2015

381. கிளிப்பாளை, 382. கிள்ளை, 383. கிளச்சி, 384. கிளிசை, 385. கிளிமீன்,
கீளிமீன்
386. மஞ்சக்கீளி (சின்னக்கீளி), 387. கறுப்புக்கீளி, 388. தாளான் கீளி, 389. நெடுங்கீளி, 390. பட்டாணிக் கீளி, 391. பாக்கீளி, 392. புள்ளிக்கீளி, 393. வரிக்கீளி, 394. வண்ணாத்திக்கீளி, 395. முட்டாள் கீளி, 396. பெருவாக்கீளி, 397. சல(ம்) தின்னிக்கீளி.
398. கீரைமீன் (Yellowfin tuna), 399. கீச்சான் (மொண்டொழியன்), 400. கோலக்கீச்சான், 401. கீட்டா, 402. குறுவளை, 403. குறுவா, 404. குப்புளா, 405. கும்பிளா (கும்பாலா), 406. குமுளா,
குறிமீன் (வெள்ளையும், மஞ்சளும் கலந்த நிறம். முதுகில் முள் இருக்கும். செதிளில் இருநிறம். வயிற்றில் சினை இருக்கும்)
407. புள்ளிக்குறி மீன், 408. வெள்ளைக்குறி மீன், 409. குறுமீன் (குதிப்புச் சுவையுள்ளது. பன்னா, குட்டிக்கத்தாளை மாதிரியானது), 410. குழிமீன் (உருண்டு திரண்டிருக்கும்), 411. குழாய் மீன் (கலிங்கன் போன்றது. தும்பு போன்ற குழாய் போன்ற வாயால் இரையை உறிஞ்சக்கூடியது), 412. குதிப்பு (சல்லமீன்), 413. குருங்கை
குத்தா
414. செந்தலைக்குத்தா, 415. செம்பக் குத்தா, 416. செந்தூரக்குத்தா, 417. தாழக்குத்தா, 418. தாடிக்குத்தா, 419. சென்னிக்குத்தா, 420. கன்னங்குத்தா, 421 வீசக்குத்தா.
422. குளச்சல், 423. குழிமுண்டான், 424. குட்டிலி (கூட்டிலி, சுட்டுத்தின்ன ஏற்ற மீன்), 425. குட்டோறு, 426. குமளம்பாசு,
கூரல் (வயிற்றில் பள்ளை எ
ன்ற காற்றுப்பை உள்ள மீன்)
427. மஞ்சள் கூரல் (அளக்கத்தாளை இனம்), 428. வெள்ளைக் கூரல், 429. கொடுவாய்க் கூரல்,
430. கூடுமுறிச்சான், 431. கூந்தா, 432. கூறவு
கெழுது

433. மண்டைக் கெழுது, 434. மடிக் கெழுது, 435. மாம்பழக் கெழுது (மஞ்சள் கெழுது), 436. கட்டக் கெழுது, 437. காயல் கெழுது, 438. முழங்கெழுது, 439. பொன் கெழுது, 440. ஊசிக் கெழுது, 441. சல்லிக் கெழுது, 442. மொண்டைக் கெழுது, 443. முள்ளங் கெழுது, 444. பொதி கெழுது (பொரி கெழுது), 445. வெண் கெழுது, 446. கூவங் கெழுது (குவ்வங் கெழுது, அரிய இனம்), 447. கருப்புக் கெழுது, 448. சலப்பைக் கெழுது, 449. வரிக் கெழுது, 450. பீக்கெழுது, 451 அங்காள் கெழுது, 452. ஆணிக்கெழுது, 453. செம்பாணிக் கெழுது (செம்பு ஆணி போன்ற மஞ்சள் முள் இருக்கும்)

Tuesday, 27 October 2015

கிளாத்தி
363. ஊமைக்கிளாத்தி, 364. உறுகிளாத்தி, 365. தோல் கிளாத்தி, 366. கறுப்புக் கிளாத்தி, 367. வெள்ளைக் கிளாத்தி, 368. பீச்சுக் கிளாத்தி, 369. பேப்பர் கிளாத்தி, 370. ஒலைக் கிளாத்தி, 371. கட்டிக் கிளாத்தி, 372. நெடுங் கிளாத்தி, 373. காவா கிளாத்தி, 374. காக்கா கிளாத்தி, 375. முள்ளுக் கிளாத்தி (மூன்று முட்கள் உள்ள மீன், பிசின் போல ஒட்டும்)
கிளிஞ்சான்
376. பல் கிளிஞ்சான் (பெரியது), 377. பார்க் கிளிஞ்சான் (பச்சை நிறமானது ராணி கிளிஞ்சான்), 378. தம்பான் கிளிஞ்சான் (மேலே கறுப்பு, கீழே சிவப்பு வண்ணம்)
பல்கிளிஞ்சான்
Parrot fish என்பதை நம்மவர்கள் எளிதாக கிளிமீன் என்று மொழிபெயர்த்து விடுகிறார்கள். ஆனால் தமிழில் பல் கிளிஞ்சான் என்பதே இந்த மீனுக்குச் சரியான பெயர்.
கிளிஞ்சான், பார் மீன். கிளிஞ்சான்களில் மஞ்சள், நீல நிறங்களில் கிளிஞ்சான்கள் உள்ளன. வண்ணமயமான கிளிஞ்சான் ஒன்றும், நீலநிறம் கலந்த வாய் கொண்ட கிளிஞ்சான்களும் உள்ளன.
தமிழக பார்க்கடல்களில் பெரிய பல்கிளிஞ்சான் ஒன்றும், பச்சை நிற பார்க்கிளிஞ்சான் (ராணி கிளிஞ்சான்) ஒன்றும் உண்டு. மேலே கறுப்பும், கீழே சிவப்பும் கொண்ட தம்பான் கிளிஞ்சான் என்ற இனமும் உண்டு.
கிளிக்கு இருப்பதுபோன்ற கனமான தடித்தவாய் இருப்பதால் இவை கிளிஞ்சான் எனப் பெயர் பெற்றன. பலமான கூரிய பற்களும் கிளிஞ்சான்களுக்கு உள்ளன. பவளப்பாறைகளைக் கொரித்து அவற்றுக்குள் உள்ள சிறிய உயிர்களை இவை உண்ணக்கூடியவை.
கிளிஞ்சான் மீன்கள் Polyps எனப்படும் பவளப்பாறை மொட்டுகளை அவற்றின் ஓடுகளுடன் உண்ணக்கூடியது. பவள மொட்டு செரிமானம்ஆகி விடும் நிலையில் ஓடுகள் மீனின் வயிற்றில் சிதைந்து மணலாகி, கழிவாக வெளியேறுகிறது.
கிளிஞ்சான் மீன்கள் வெளியேற்றும் மணல்துகள்களாலேயே சிறுசிறு தீவுகள் உருவாவதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் கிளிஞ்சான்களில் 75 முதல் 100 இனங்கள் உள்ளன. பெரிய செதிள்களும், தடித்த அடர்த்தியான உடலும், கண்ணைப் பறிக்கும் வண்ணமும் இந்த மீன்களுக்குரிய தனிஇயல்பு.
கும்பலாக இவை காணப்பட்டாலும் கிளிஞ்சான்கள் கூட்டமீன்கள் (Schooling fishes)  அல்ல. இவை உறுதியாக, ஆனால் மெதுவாக நீந்தக்கூடியவை.
இரவில் தன்னைச் சுற்றி சளிபோன்ற ஒரு படலத்தைச் சுரக்கவிட்டு அதற்குள் தங்கியிருந்து, காலையில் அந்த போர்வையை விட்டு வெளியே வரும் கிளிஞ்சான் இனங்களும் உள்ளன.
கிளிஞ்சான்கள் தனிஇன மீன்கள் என்று கருதப்பட்டாலும் இவை Wrasse இன பார் மீன்களுக்கு உறவுக்கார மீன்கள் எனக் கருதப்படுகின்றன.
கிழங்கான்

379. வெள்ளை கிழங்கான், 380. கிளக்கான்.

Sunday, 25 October 2015

களவா(ய்)
298. கல்லுக் களவா, 299. குமரிக் களவா, 300. சிவப்புக் களவா, 301. சிக் களவா, 302. தோக் களவா, 303. மஞ்சக் களவா, 304. மரக் களவா, 305. புள்ளிக் களவா, 306. பஞ்சிக் களவா, 307. பாரக் களவா, 308. தலைக் களவா, 309. உள்ளக் களவா,
காளா
310. கட்டிக்காளா, 311. கணாக் காளா, 312. சீனாக் காளா, 313. தாழன் காளா, 314. உள்ளக் காளா,
காரல்
315. அப்புக்காரல் (மீன்பிடி வலையில் வந்து அப்பும் காரல்), 316. அமுக்குக் காரல், 317. கலிகாரல், 318. பொட்டுக்காரல், 319. நெடுங்காரல், 320. மஞ்சக் காரல், 321. மரவுக்காரல், 322. வரிக்காரல், 323. வரவுக் காரல், 324. உருவக் காரல் (குதிப்புக்காரல்), 325. ஊசிக்காரல், 326. ஒருவாக் காரல், 327. பெருமுட்டிக் காரல், 328. கவுட்டைக் காரல், 329. நெய்க் காரல், 330. வட்டக்காரல், 331. கண்ணாடிக் காரல் (சில்லாட்டை காரல், பளபளவென பாதரம் பூசிய கண்ணாடி போல மிளிரும்), 332. குழிக்காரல், 333. குல்லிக்காரல், 334. ஒட்டுக்காரல், 335. செவிட்டுக்காரல், 336. சென்னிக்காரல் 337. காணாக் காரல், 338. காணாவரிக்காரல் (வரிக்காரலில் சிறியது), 339. காசிக் காரல், 340. சுதும்புக் காரல் 341. சலப்பக் காரல், 342. சலப்ப முள்ளுக்காரல், 343. சளுவக் காரல், 344. சலப்பட்டக்காரல், 345. சிற்றுருவக் காரல் (சித்துருவக் காரல்), 346. பஞ்சக்காரல், 347. விளக்குக்காரல், 348. தீவட்டிக்காரல், 349. கொம்புக் காரல், 350. நாமக் காரல், 351. பொடிக் காரல் (பூச்சிக்காரல்), 352. பூட்டுக்காரல், 353. முள்ளங்காரல்,
354. கார்வா(ர்), 355. கானாங் கெழுத்தி, 356. காசியாபன், 357. காடன், 358. காக்கைக் கொத்தி (ஊசிமூக்கு உடையது)
காரை
359. கூட்டுக்காரை, 360. சுதுப்புனம் காரை, 361. மஞ்சள் காரை, 362. காட்டாவு
கிளாத்தி (Trigger Fish)
பார்மீன்களில் ஓரினமான கிளாத்தி, பாலிஸ்டே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் முதுகில் 3 முள்கள் காணப்படும். முதல்முள் தடித்த கனமான முள். இதையடுத்து வால் பக்கம் இருக்கும் 2ஆவது முள்ளை முன்னே தள்ளினால் மட்டுமே இந்த முதல்தடிமுள் உறுதியாக நிற்கும். 2ஆவது முள்ளை பின்னோக்கி தள்ளினால் தடித்த முள் தளர்ந்து விடும். இதில் 3ஆவது முள், துப்பாக்கியில் உள்ள இழுவிசை போன்றது. அது கிளாத்தியின் உடல்வழியாக 2ஆவது முள்ளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வகை மீன்களுக்கு டிரிக்கர் மீன் எனப் பெயர் வரக்காரணம் இந்த முள்தான்.
இந்த தடித்த முதல் முள், மேற்பாறைகளில் குத்திக் கொண்டு கிளாத்தி மீன் நீந்தாமல் ஓரிடத்தில் நிற்க உதவுகிறது. பிறசிறு மீன்களை விரட்டி இரை கொள்ளக்கூடிய கிளாத்தி, தனக்கு ஆபத்து எதிரிடும்போது பார்பொந்துக்குள் உடலைத் திணித்து, முதுகு முள்ளை பாரில்குத்தி தன்னை இறுக்கி ஒளிந்து கொள்ளும்.
கிளாத்தியின் முதுகுப்பின் தூவியும், வால்பக்க அடித்தூவியும், ஒரே அளவாக, பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும். கிளாத்தி மீனின் முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று.
கிளாத்தி அதன் பற்களை நறநறத்தோ, அல்லது எண்ணெய் கொண்ட வயிற்றுப் பள்ளையை அசைத்து சத்தம் எழுப்பக்கூடியது. இப்படி ஓசை எழுப்பாத கிளாத்தி ஊமைக் கிளாத்தி என அழைக்கப்படுகிறது.
கிளாத்தியில் பல வகைகள் உள்ளன.
கிளாத்தியின் சற்று கனமான தோலைக் கழற்றிவிட்டு சிலர் அதை உண்பார்கள். சிலர் கிளாத்தியை உண்ணமாட்டார்கள்.



Saturday, 24 October 2015

223. ஓரண்டை, 224. ஒடத்தேரி, 225. ஓரியான் சம்பு, 226. கடல் கெளுத்தி, 227. கல்வெட்டி, 228. கல்லடக்கை, 229. கல்வடக்கை, 230. கல் உறிஞ்சி, 231. கலவா (மூஞ்சான்), 232. கல்லூரி (மூஞ்சி கார்வா), 233. கடவுளா, 234. கடல் சீலா (மஞ்சள்நிறம், வயிறு கறுப்பு. தலை சட்டி போல இருக்கும், பார்க்கடலில் மட்டுமே ஒன்றிரண்டாகத் திரியும். சீலாப் போல கூட்டமாகத் திரியாது), 235 கடல் சவுக்கை, 236. கடலாடி, 237. கட்டக்கொம்பன், 238. கருந்திரளி, 239. கல்லாரல், 240. கருக்கா (விளமீன்), 241. கச்சி (ககசி), 242. கச்சம், 243. கக்காசி (செந்நவரை), 244. கருங்காக்கணம், 245. கருங்கண்ணி, 246. கருணா விளமீன், 247. கருமுறை செல்வி, 248. கலக்கி,  249. கசலி, 250. கயல், 251. கட்டமேதல், 252. கருப்பமட்டவன் (நவரை), 253. கடல் தவக்கை, 254. கறிமீன், 255. கறுப்புவால் புட்சக்கன்னி, 256. களறியன், 257. களிமீன், 258. கருக்கு மட்டை (வெள்ளை), 259. களர் (மத்தி. முதுகில் பச்சை நிறம்), 260. கண்ணாடி மீன், 261. கன்னமீன், 262. கன்னங்குட்டை, 263. கணவ ஓலை,
கத்தாளை
264.அளக்கத்தாளை, 265. ஆண்டிக் கத்தாளை (ஆண்டாமிக் கத்தாளை), 266. ஆனைக் கத்தாளை,  267. ஆனவாயன் கத்தாளை, 268. கீறுக் கத்தாளை, 269. சதைக் கத்தாளை, 270. புள்ளிக் கத்தாளை, 271. சாம்பல் கத்தாளை, 272. கருங் கத்தாளை, 273. வரிக் கத்தாளை, 274. முட்டிக் கத்தாளை, 275. மொட்டைக் கத்தாளை, 276. முறாக் கத்தாளை, 277. பன்னாக் கத்தாளை, 278. கலிங்கன், 279. சப்பைக் கலிங்கன் (கட்டைக் கலிங்கன்), 280. உருளைக் கலிங்கன், 281. கலைக்கான், 282. கட்லா,
கட்டா
283. செல் கட்டா, 284. ஓமலி கட்டா, 285. ஆரியக் கட்டா, 286. ஆழியாக் கட்டா, 287. ஓலைக் கட்டா, 288. ஓங்கல் கட்டா  (19 கிலோ வரை எடையிருக்கும்), 289. கறுப்புக் கட்டா, 290. திரியா கட்டா, 291. மஞ்சள் கட்டா, 292. வங்கடை கட்டா, 293. குருக் கட்டா, 294. அம்முறிஞ்ச கட்டா (ஊசிமுகம், நடுக்கண்டம் வட்டமாக இருக்கும்), 295. கண்டல், 296. கடலெலி, 297. கடமாடு.
கடமாடு (Trunk Fish)

மாட்டுமீன், பெட்டி மீன் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த வகை பார் மீன், கடினமான வெளித்தோலைக் கொண்டது. ஆமை ஓடு போல இந்த கனத்த தோல், மீனின் உடல் முழுவதையும் மூடியிருக்கும். இந்த உடல் 6 பக்கங்கள் கொண்ட செதிள் அல்லது தகடுகளால் ஆனது.
இந்த கனமான தடித்ததோல் காரணமாக இந்த வகை மீனால் மிகமிக மெதுவாகத்தான் நீந்த முடியும். உடலை நகர்த்துவது கடினம். மேல் தூவிகளோ, அடித்தூவிகளோ இல்லாத நிலையில் இந்த மீன் வால்புறம் மேலும் கீழும் இருக்கும் சிறுதூவிகளை அசைத்தே நகர்கிறது.

பெட்டி வடிவத்தில் இருப்பதால் ஆங்கிலத்தில் இது பெட்டி மீன் என அழைக்கப்படுகிறது. தமிழில் இந்த மீனுக்கு கடமாடு என்பது பெயர்.
மாடு போன்ற கண்கள் இருப்பதாலும், கண்களுக்கு மேலே மாட்டின் கொம்பு போன்ற துருத்தல் மேடு இருப்பதாலும் இது மாடு என அழைக்கப்படுகிறது.
கடமாடு குட்டியாக இருக்கும்போது அதன் உடல் நீள்வட்ட வடிவில் காணப்படும். மீன் முதிர முதிர அது முக்கோண வடிவமாகும். இரை தின்னும் போது தலையை தரையில் ஊன்றி, இது முகத்தால் தரையைக் கிளறி இரைதேடி இரையை உறிஞ்சித் தின்னும்.
மெதுவான நீச்சல் காரணமாக மீன்வலைகளில் இது எளிதாக சிக்கும். ஆனால் உணவுக்காக யாரும் இதைப்பயன்படுத்த மாட்டார்கள். ஆனால், வெளிநாடுகளில் இதன் தடித்த தோலுடன் இதை வறுத்துச் சாப்பிடும் பழக்கம் உள்ளது.
கடமாடுகளில் புள்ளிக் கடமாடு ஒன்றரை அடி நீளம் உடையது. அதுபோல முதுகில் 4 சேணக்குறிகள் கொண்ட லெதர் ஜாக்கெட் என அழைக்கப்படும் மீனும் ஒன்றரை அடி நீளம் இருக்கும்.
நமது கடல்களில் 7 அங்குல நீளமுள்ள சிறிய கடமாடு உண்டு.
கடமாட்டில் மெல்லிய தோல் கொண்ட கடமாடும் உள்ளது. வெள்ளை நிறமான அதன்மேல் கறுப்புத் திட்டுகளும், கறுப்புநிற வரிகளும் காணப்படும்.
இன்னொரு வகை கடமாடு, சிவப்புநிற நெற்றி, உதடுகளுடன், பச்சை நிறத்தில், நீலநிற வாலுடன் விளங்கும்.

Friday, 23 October 2015

166. அருந்தல், 167.அராம்பு, 168. அரடுக்கு, 169. அரணை (பாம்பு மாதிரியான மீன். சாப்பிட மாட்டார்கள்), 170. அண்டிகா, 171. அங்கலாத்தி, 172. அக்கா கிளிமீன், 173. அளக்கத்தான், 174. அயலை, 175. முண்டக்கண் அயலை, 176. அரலுக்கு, 177. அரஞ்சான் பொடி, 178. அகலை, 179. அவிலி, 180. ஆரல், 181. ஆளல், 182. ஆழியா, 183. ஆக்கணா, 184. இலத்தி, 185. புள்ளி இலத்தி, 186. இடிமீன், 187. இணாட்டு, 188. ஈக்குத் தொண்டன், 189. உறு, 190. உருவு (ஒட்டுமீன்), 191. உரா, 192. கொம்பு உரா, 193. உல்லம் (அழிந்து விட்ட மீன், உள்ளதை விற்று உல்லம் வாங்கிச் சாப்பிடு என்பது பழமொழி), 194. உடும்பு, 195. உழுவாரா, 196. ஊளி மீன், 197. கரை ஊளி (திரியான்), 198. மாஊளி, 199. மஞ்சள் ஊளி, 200. ஊடன் 201. கறுப்பு ஊடன், 202. புள்ளி ஊடன், 203. வரி ஊடன், 204. ஊட்டான், 205. ஊரா, 206. ஊர்த்த வெள்ளை, 207. ஊலா (ஊளா), 208. ஊடகம், 209. ஊடவரை, 210. ஊசிக்கவலை, 211. எரையா (எறியா), 212. எறியாள், 213. எறும்பன் (எலும்பன்), 214. எலக்கு (சிறிய வாளை மீன்), 215. எட்டவாளை (சூரை இன மீன்), 216. ஒட்டி (முயல்மீன்), 217. ஒசிகா, 218. ஒடுக்கு, 219. ஓரா (முள் குத்தினால் கடுக்கும், இதன் நெய்யைக் கொண்டே இதைப் பொறிக்கலாம்) 220. வெள்ளை ஓரா, 221. வடையன் ஓரா (கறுப்புநிற வரிகள்), 222. ஓவாய்.

Thursday, 22 October 2015

146. அடல் (அதள்), 147.நாய் அடல் (நாய்ப் பல்போல ஈரடுக்குப் பல் உடையது), 148. மண் அடல் (வட்டமானது, வழுக்கும்), 149. அட்ளி (கருவாவல் மாதிரியான மீன்), 150. அடவா, 151. அம்னி பிலால் என்ற புள்ளி பிலால், 152. அடமீன், 153.அடையா, 154. அத்தி, 155. அழுவை, 156 கண் அழுவை (சிறியது), 157.அவுரி, 158. அறுக்குளா (சீலா), 159. அவ்லிஸ் (அய்லஸ்) (கட்டா வகை)
அஞ்சாலை (ஆஞ்சாளை)
160. கறுப்பு அஞ்சாலை, 161. புளியன் அஞ்சாலை, 162. புள்ளி அஞ்சாலை (சிறுத்தை அஞ்சாலை), 163. பூ அஞ்சாலை, 164. வரி அஞ்சாலை, 165. தவிட்டு அஞ்சாலை

அஞ்சாலை
அஞ்சாலையில் மொத்தம் 57 வகைகள் உள்ளன. இதில் மன்னார் வளைகுடாவில் மட்டும் 6 வகை அஞ்சாலைகள் காணப்படுகின்றன. கருப்பு அஞ்சாலை, புளியன் அஞ்சாலை, புள்ளி அஞ்சாலை, பூ அஞ்சாலை, வரி அஞ்சாலை, தவிட்டு அஞ்சாலை என்பன அவை. இதில், புள்ளி அஞ்சாலைக்கு சிறுத்தை அஞ்சாலை என்றொரு பெயர் உண்டு.
அஞ்சாலை மீன் அல்ல. மீன்களுக்குரிய செல் எதுவும் அஞ்சாலைக்கு இல்லை. உடல் முழுக்க பொடிப்புள்ளிகளுடன் பாம்பின் தோற்றம் கொண்ட அஞ்சாலைக்கு கண் சிறியது. பார்வைக் குறைவுள்ள அஞ்சாலை, இரவில் மட்டுமே பார் விட்டு வெளியே வரும்.
அஞ்சாலை, ஒருவகையில் கெம்பைலசின் (Gempylus) உறவுக்கார மீன். அது என்ன கெம்பலைஸ்?
கெம்பலைஸ் என்று அழைக்கப்படும் (Snake Mackeral) பாம்புபோன்ற மீன், 3 அடி நீளம் கொண்டது. இதன் மேற்புறம் கருநீலநிறமாகவும், அடிப்புறம் எகு கலந்த நீல நிறமாகவும் இருக்கும். இதன் மெல்லிய  தோல் இறுக்கிப்பிடித்தால் உரிந்து வழன்று விடும்.
பகலில் இந்த மீனின் கண்கள் மங்கிவிடும். இரவில் இரைதேடி ஆழத்தில் இருந்து இதுமேலே வரும். இதன் தாடையில் உள்ள நீண்ட கூரிய பற்கள் மேல் தாடையின் பின்புறம் மடக்கக்கூடியவை.

கெம்பைலசின் வயிற்றைப் பிடித்து பிதுக்கினால் அதன் உள்ளே கடலின் அடி ஆழத்தில் வசிக்கும் ஒருவகை வெள்ளைநிற மீன் இருக்க வாய்ப்புள்ளது.

Wednesday, 21 October 2015

101.பூவாளித் திருக்கை, 102.கொம்புத் திருக்கை, 103. குருவித் திருக்கை, 104. வல்வடித் திருக்கை, 105. கொட்டுவா திருக்கை, 106. சுருள் திருக்கை, 107. புளியன் திருக்கை (புள்ளியன் திருக்கை), 108. கள்ளத் திருக்கை, 109. வருக்கை, 110. தப்பாக்குழி, 111. சோனகத் திருக்கை, 112. கருவால் திருக்கை (கருவாலன் திருக்கை. இதன் சதை கறுப்பாக பஞ்சுபோல இருக்கும்), 113. ஓட்டைத் திருக்கை, 114. கோட்டான் திருக்கை, 115. பஞ்சாடு திருக்கை (பச்சை கலந்த பழுப்பு நிறமாக இருக்கும்), 116. மட்டத் திருக்கை, 117. சப்பைத் திருக்கை, 118. செப்பத் திருக்கை, 119. நெய்த் திருக்கை, 120. கழுவாய், 121. சீமான் திருக்கை, 122. ஆடாத் திருக்கை (ஆடாமுழித் திருக்கை), 123. உள்ளான் திருக்கை, 124. கண்டாங்கி, 125. ஊழித் திருக்கை, 126. பூவாலித் திருக்கை, 127. செம்மூக்கன் திருக்கை, 128.கூண்டத் திருக்கை, 129. சமன் திருக்கை, 130. தடங்கான் திருக்கை, 131. பாஞ்சாலன் திருக்கை, 132. வண்ணாத்தித் திருக்கை, 134. கொப்புத் திருக்கை, 135. சங்கோசான் திருக்கை, 136. கட்டுத் திருக்கை, 137. கண்ணாமுழித் திருக்கை, 138. முள்ளுத் திருக்கை, 139. கண்ணந்திரச்சி, 140. அரத் திரச்சி, 141. தும்பத் திரச்சி. 142. பூவாளித் திருக்கை

உலுக்கு (மின்சாரத் திருக்கை)

143. புள்ளி உலுக்கு (பெரியது), 144. மான் உலுக்கு, 145. தவிட்டு உலுக்கு, (குட்டி உலுக்குத்தான் அதிக மின் அதிர்வைக் கொடுக்கும்)

Tuesday, 20 October 2015

68.இழுப்பா, 69. வேளா, 70. கலக்கு வேளா, 71.கூன் உழுவை, 72. கச்சி உழுவை, 73. பூந்தி உழுவை, 74. பால் உழுவை  (படங்கன்) , 75. புள்ளி உழுவை, 76. கள் உழுவை (பண்டகள்), 77. மான் உழுவை, 78. மட்டி உழுவை (மட்டி மிக்க என்று அழைக்கப்படும் இதன் உடல் முழுவதும் முள்களாக இருக்கும்), 79. வெளிச்சி (தும்பிலி), 80.

திருக்கை
81. மணத்திருக்கை, 82. புள்ளித் திருக்கை (வழுவாடி), 83 கட்டித் திருக்கை, 84. ஓலைவாலன் திருக்கை, 85. மணிவாலன் திருக்கை, 86. சங்குவாயன் திருக்கை, 87. புள்ளி சங்குவாயன் திருக்கை,  88. வட்டத் திருக்கை, 89. செந்திருக்கை, 90. முண்டக்கண்ணன் திருக்கை, 91. அம்மணத் திருக்கை, 92. அடல் திருக்கை, 93. செம்மண் திருக்கை, 94. களித்திருக்கை (பெரிய திருக்கை), 95. அட்டணைத் திருக்கை (பெருந்திருக்கை), 96. பேய்த் திருக்கை, 97. அழுக்குத் திருக்கை, 98. சுண்ணாம்புத் திருக்கை, 99. யானைத் திருக்கை, 100. கழக்குத்  திருக்கை,


Monday, 19 October 2015

அம்மணி உழுவை  (பெட்டிச்சுறா)
67. அம்மணி உழுவை (Whale shark). உலகின் மிகப்பெரிய மீன் இனம் இதுதான். தமிழகத்தின் தென்கடல் பகுதியில் அம்மணி உழுவை என்றும், தமிழகத்தின் வடகடல் பகுதிகளில் பெட்டிச்சுறா என்றும் இது அழைக்கப்படுகிறது.
முழுநிலா காலத்துக்கு ஒரு வாரத்துக்குப்பிறகு பவளப்பாறைகள் லட்சக்கணக்கான சின்னஞ்சிறு முட்டைகளை வெளிவிடும். கடலின் மேற்பரப்பில் வந்து மிதக்கும் இந்த முட்டைகளை, கிரில் (Krill) எனப்படும் இறால் போன்ற சின்னஞ்சிறு உயிர்கள் இரை கொள்ளும். பிளாங்டன்களுடன் கலந்து மிதக்கும் கிரில்களை உண்ண அம்மணி உழுவை அங்கு வந்து சேரும்.
அம்மணி உழுவை ஹோம்ராஸ் என்னும் வகைப்பாட்டைச் சேர்ந்த உணவுக்குப் பயன்படாத மீன். இதைப் பிடித்து கரைக்கு கொண்டுவந்தால் அதன் தசை தண்ணீர் போல உருகும். விரைவில் மீன் கரைந்து ஒன்றுமில்லாமல் கொளகொளத்துப் போய்விடும்.
முப்பதடி நீளமும், 40 டன் எடையும் கொண்ட அம்மணி உழுவை, சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில், டென்னிஸ் பந்தளவு எண்ணற்ற புள்ளிகள் கொண்டது. எங்கிருந்து வந்தது என்பது தெரியாமலேயே இது திடீரென கடலில் தோன்றி நீந்துபவர்களை திகைக்க வைக்கும்.
அம்மணி உழுவையை முதன்முறையாக கடலில் பார்ப்பவர்களை அதன் பிரம்மாண்ட புள்ளிப் பொறித்த தோற்றம் கண்டிப்பாக பயமுறுத்தும்.
மிக மெதுவாக கடலில் நீந்தும் அம்மணி உழுவை, மனிதர்களின் அண்மையை வெறுப்பதில்லை. மனிதர்களுக்கு எந்த தீங்கும் இது இழைத்ததில்லை. இது நீந்திச் செல்லும்போது இதன் அருகில் நீந்தும் யாரையும் இது தாக்கியதும் இல்லை. இத்தனைக்கும் 4 ஆயிரம் பற்ககளைக் கொண்ட மீன் இது.
அம்மணி உழுவையின் முக்கிய உணவு பிளாங்டன்தான். நெத்தலி போன்ற சிறுமீன்களையும் இது உணவாகக் கொள்ளும். இதன் பிரம்மாண்டமான வாய் கடல்நீரை வடிகட்டி, அதில் உள்ள பிளாங்டன்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளும்.
அம்மணி உழுவை சில வேளைகளில் தெரியாத்தனமாக படகுகள் மீது மோதி விடுவதும் உண்டு. சிலவேளைகளில் மீன்பிடி படகை இது விடாமல் பின்தொடரவும் செய்யும். அம்மணி உழுவை முட்டையிடுகிறதா? குட்டி போடுகிறதா என்பது இதுவரை யாருக்கும் புரியாத புதிர்.


அம்மணி உழுவை பார்மீன் இல்லை என்றாலும் அடிக்கடி கடல்
 பார்களுக்கு வந்து செல்லக்கூடிய மீன்.

Sunday, 18 October 2015

பன்மீன் கூட்டம்

நம் விழியை விட்டும், மொழியை விட்டும் விலகி நீந்தத் தொடங்கியிருக்கும் ஓராயிரம் மீன்களின் தொகுப்பு.
சுறா
1.திருவாளியன் சுறா, 2. ஓலைச்சுறா, 3. பால்சுறா, 4. குண்டன் சுறா (தடியன் சுறா), 5. குமரிச்சுறா, 6. வழுக்குச் சுறா, 7. கோர சுறா, 8. அடுக்குப்பல் சுறா, 9. குறுங்கண் சுறா, 10. குரங்கன் சுறா. 11. செஞ்சுறா, 12. கொம்பன் சுறா. 13. வெள்ளைச் சுறா. 14. மட்டிச் சுறா, 15. மணிச்சுறா. 16. கோலாச் சுறா. 17. காலன் சுறா. 18. ஆரணிச் சுறா. 19. மேயும் சுறா (மேய்ச்சல் சுறா) 20, படுவாய்ச் சுறா, 21. வடுவன் சுறா. 22. புள்ளிச்சுறா. 23. வெண்ணெய்ச் சுறா. 24. நெளிஞ்சுறா,  25. பேய்ச் சுறா. 26. புடுக்கன் சுறா. 27. பரங்கிச்சுறா. 28. நண்டுதின்னிச் சுறா. 29. நண்டு பொறக்கிச் சுறா. 30. ஆத்துச் சுறா (ஆத்துவாய் சுறா) 31. கட்ட சுறா (பிள்ளைச் சுறா), (காட்டச்சுறா), 32. பெருஞ்சுறா (பெருந்தலைச் சுறா), 33. நெடுந்தலைச் சுறா, 34. கரமுடிச் சுறா (கருமுடிச் சுறா), 35. புல்லிச் சுறா, 36. வல்லுலன் சுறா, 37. திரவிமூக்கு சுறா, 38. பில்லைச் சுறா, 39. கொப்புள் சுறா, 40. கூரச் சுறா, 41. முள்ளன் (குமரி மாவட்டச் சுறா, வால் பெரியது), 42. கீரிப்பல்லன் சுறா, 43. கோச்சுறா, 44. கணவாய்ச் சுறா, 45. பஞ்சுறா (மஞ்சள் நிறம், வயிற்றுப் பக்கம் வெள்ளை) (பஞ்சல் சுறா), 46. குட்டிச்சுறா, 47, நெளியன் சுறா, 48. இனப்பத்திச் சுறா (பெரிய அளவிலான மீன்), 49. மண்டையன் சுறா, 50. ஒற்றைக் கொம்பன் சுறா, 51. வெள்ளைக் கொம்பன் சுறா, 52, வரிப்புலியன், 53. வரிக்குரங்குச் சுறா, 54. கொம்புளிச் சுறா, 55. மடையன் சுறா, 56. மம்மட்டிச் சுறா, 57. மானச் சுறா, 58. முருகவுருட்டி சுறா, 59. தாழைச் சுறா, 60. மழுவன் சுறா, 61. துப்புச்சுறா, 62, வெள்ளுடும்பன் (இதன் முட்டையைக் கத்தியாலும் வெட்ட முடியாது), 63. உழுவன் சுறா, 64, அச்சாணிச் சுறா, 65. மஞ்சள் சுறா (பிள்ளை பெற்ற அன்னையருக்கு பால் சுரக்க இதைக் கொடுப்பார்கள்), 66. கம்பம் சுறா (வெலங்குத் தண்ணீரில் (ஆழ்கடலில்) உள்ள சுறா.




Friday, 2 October 2015

கோஸ்தா என்றால் மாலுமி

போர்ச்சுக்கீசியர்கள் முத்துக்குளித்துறைக்கு தந்த குடும்பப் பெயர்கள் ஏறத்தாழ எண்பது.
பெர்னாண்டோ (பர்னாந்து), அல்மெய்தா, கோமஸ், லோபோ, மச்சாடோ, மோத்தா, வாஸ், வாய்ஸ், பெரைரா, கொரையா, மஸ்கரனாஸ், பீரிஸ், கூஞ்ஞே, தற்குரூஸ், தல்மேத்தா, கல்தேரா, கொரேரா, டி கோஸ்தா, ரோட்ரிகஸ், ரொட்ரிகோ, மிராண்டா, டிவோட்டா, பாய்வா, கர்டோசா, மெதடிஸ், டி சில்வா, டி சூசா, டி குரூஸ், டி ரோஸ், பிஞ்ஞோரா, அல்வாரிஸ், வல்தாரிஸ், வதேரா, கர்வாலியோ (கர்வாலோ), ரோச், விக்டோரியா, மொரேய்ஸ், சில்வேரா, காகு, குத்தாலினி,  லோபஸ், லியோன், மொரேல், மெல், மென்டிஸ், மெனஸ், மென்டோன்கா, கல்தேரா, பசங்கா, பிமன்டோ, ராயன், ராவேல், செக்குய்ரா, சோரிஸ்...

போன்றவை அவற்றுள் சில.
இவை தவிர நம் வாயில் நுழையாத, நம் பக்கம் புழக்கத்தில் இல்லாத போர்ச்ச்கீசிய குடும்பப் பெயர்களும் ஏராளமாக உள்ளன.
கவுத்தோ, சல்தான்கா, ஓர்த்தா, வர்த்தமா, மெஸ்கிட்டா, டி மெல்லோ, லிஸ்போவ, நொரன்கா, காமா, மெயினுர்லெஸ், காம்போய, அமரால், அல்பர்க்கர், அப்ரியு, வெய்ரா, டி வாலே, ஆசிவெய்ரா, மான்சான்றோ போன்றவறை அவற்றுள் சில...
போர்ச்ச்கீசிய குடும்பப் பெயர்களுக்கு உள்ள அர்த்தங்கள் விசித்திரமானவை.
எடுத்துக்காட்டாக டி கோஸ்தா என்ற பெயர் மாலுமியைக் குறிக்கிறது.
டி கோஸ்தா என்ற சொல்லுக்கு கடற்கரையில் இருந்து வந்தவர் என்றும் அர்த்தமாம்.
டி குரூஸ் என்றால் சிலுவையில் இருந்து வந்தவர் என்று அர்த்தமாம்.
லோபோ என்றால் ஓநாய் என்று அர்த்தம்.
(லோபோக்கள் வருத்தப்படவேண்டாம். ஐரோப்பாவில் சிங்கம்,புலி இல்லை. அங்கு மதிக்கத்தக்க பெரிய விலங்கு ஓநாய்தான். தவிர, ரோமானிய நாகரீகத்தைத் தோற்றுவித்த ரோமுலஸ், ரெமுசுக்கு பாலூட்டி அவர்களை வளர்த்தது ஓர் ஓநாய்தான்)
கோமஸ் என்றால் நல்ல மனிதர்.
டி சில்வா என்றால் காட்டில் இருந்து வந்தவர் என்று அர்த்தம்.
பெரைரா என்றால் இரும்புச் சுரங்கத்தில் இருந்து வந்தவர்.
செக்குய்ரா என்றால் வறண்ட பாலைநிலத்தில் இருந்து வந்தவர். சல்தான்கா  என்றால் அவர் ஸ்பெயின் நாட்டின் சல்தான்கா நகரில் இருந்து வந்தவர் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தோல் பதனிடும் வேலை செய்பவருக்கு கொரியா என்று பெயர்.
பியர் மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவே குடியிருந்தால் அவர் பெரைரா,
மொரெய்ஸ் என்றால் மல்பெரி மரங்களுக்கு நடுவில் வாழ்பவர் என்று அர்த்தம்.
கவுத்தோ என்றால் சுற்றிலும் புல்வெளி சூழ்ந்த இடத்தில் இருந்து வந்தவர்.
மிராண்டா என்றால் அற்புதமானவர், அன்பு நிறைந்தவர் என்று அர்த்தம்.
கொன்சால்வஸ் என்றால், ஆயுதமின்றி வெறும் கையால் சண்டையிடக் கூடிய வீரர்.
பிண்டோ என்றால் கண்ணாடி அணிந்தவர் என்று அர்த்தமாம்.



Wednesday, 9 September 2015

கிளாத் மொனே

இம்ப்ரசனிச ஓவிய இயக்கத்தின் மிக மூத்த முன்னோடியாக கருதப்படுபவர் கிளாத் மொனே.
பாரிஸ் நகரத்தில் நடந்த ஓர் ஓவியக் கண்காட்சியில் கிளாத் மொனேயின், சூரிய உதயம் ஒரு பதிவு என்ற ஓவியமே, இம்ப்ரசனிசம் என்ற பெயர்சூட்டலுக்கு காரணமாயிற்று. இம்ப்ரசனிசம் என்ற பெயரை அருளிச் செய்ததன் மூலம், இம்ப்ரசனிச இயக்கத்தின் தலைமகனானார் மொனே.

அர்ஜென்டியுல் ஒரு பிரெஞ்சு நகரம்.
19ஆம் நூற்றாண்டு பாரிஸ் நகரத்தின் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் பிடிக்காத ஓர் ஓவியர் கூட்டம் அர்ஜென்டியுல் நகரத்தைத் தங்கள் தங்கு தளமாக்கிக் கொண்டது.
பாரிஸ் நகரத்தின் இறுக்கத்தை வெறுத்த இந்த இம்ப்ரசனிச ஓவியக் குழாமுக்கு கிளாத் மொனே தலைவரானார்.
இந்த ஓவியர்கள், தங்கள் ஓவியங்களால் அர்ஜென்டியுல் நகரத்துக்கு சாகாவரம் தந்தார்கள். இந்த ஓவியர்களின் கைவண்ணத்தால் அந்த நகரம் இறவா வரம் பெற்றது.
அர்ஜென்டியுல், நகரம் பாரிஸ் நகரத்துக்கு 11 கி.மீ. வடமேற்கே அமைந்திருந்தது. பாரிஸ் நகரத்தைப் போல இந்த நகரமும் சீன் நதிக்கரையில் அமைந்திருந்தது.
சீன் நதி மிக அகலமாகவும், ஆழமாகவும் ஓடியது அர்ஜென்டியுல் நகரத்தில்தான்.
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை கோதுமை வயல்கள், திராட்சைத் தோட்டங்கள், அஸ்பரகாஸ்.
1851ல் பாரிஸ் நகரத்துடன் அர்ஜென்டியுல் நகரத்தை இணைந்து இருப்புப்பாதை போடப்பட்டது.
ஆனால், அர்ஜென்டியுல் அதன் அழகை இழக்கவில்லை.
வார இறுதியில், பாரிஸ் நகரத்தவர்கள் ஒருநாள் பொழுதைக் கழிக்கும் உல்லாசத் தளமாக அர்ஜென்டியுல் விளங்கியது.
அதிலும் சீன் நதியில் படகு விட்டு பாரிசியர்கள் உளம் மகிழ்ந்தார்கள். நீராவிப் படகுப் போட்டிகளையும் நடத்தினார்கள்.
சீன் நதியின் அழகு, நதியின் மீதுள்ள பாலங்கள், சிற்றூர்த்தனம் நிறைந்த புறநகர்க்காட்சிகள், தெருக்கள், இவற்றை அந்த ஓவியர் குழாம் வரைந்து தள்ளியது.
இம்ப்ரசனிசம் உடைபட்ட தூரிகைத் தீற்றல்கள், பிரிக்கப்பட்ட ஒளி வண்ணங்கள் என இம்ப்ரசனிச பாணி ஓவியங்களால் இந்த நகரம் உயிர் பெற்றது.
குறிப்பாக கிளாத் மொனே இந்த நகரத்துக்கு எழில் ஊட்டினார்.
எதுவர்ட் மனே, அகஸ்தின் ரினாய்ர், ஆல்பிரட் சிஸ்லி போன்றவர்கள் ஒருவரை ஒருவர் வரைந்தார்கள். அடுத்தவர்களின் குடும்பங்களையும் ஓவியமாகத் தீட்டினார்கள்.
இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிய கிளாத் மொனே, 1872ல் மட்டும் இந்த நகரத்தை மையப்புள்ளியாக வைத்து 60 ஓவியங்களைத் தீட்டினார்.
1872ல் சிஸ்லி, மொனேயைச் சந்தித்தார். ஒரே கருப்பொருளை வைத்து இரு ஓவியர்கள் ஒரே நேரத்தில் ஓவியம் வரையும் முறையை இவர்தான் அறிமுகம் செய்து வைத்தார்.
நகரின் முக்கிய ஹெலாய்ஸ் சதுக்கம், மரச் செறிவு ஆகியவற்றை இவர்கள் கூட்டாக வரைந்தார்கள்.
1874ல் ரெனாய்ர், மொனே ஆகியோர் 5 இணை ஓவியங்களை வரைந்தார்கள். அதே ஆண்டு இவர்கள் வரைந்த பாய்மரப் படகுகள் ஓவியம் மிகவும் புகழ்பெற்றது.

Sunday, 6 September 2015

நதி

உடைந்த நீர்த்துளிகளின் ஊர்வலம்!
கரைபுரளும் கண்ணாடிச் சாறு!
ஆதாமின் குளியல் தொட்டி!
ஏவாள் முகம் பார்த்த முதல் கண்ணாடி!
நதி, நகரும் மீன்காட்சி அரங்கம்!
நதி, வானவில்லின் ஏழு வண்ணத்தில் நீல வரியை மட்டும் நெளிய விட்ட அழகு!
நதி ஒரு நகரும் சாலை. இந்த நீலச்சாலையின் நெடுகே விழுந்தால் இது நம்மையே இழுத்துச் செல்லும் நவீன சாலை!
நதி படகுளை தன் முதுகில் விட்டும் பயணம் செய்யும். குழந்தைகளாக குடங்களுக்குள் வந்தும் குடிபுகும்!
   -மோகனரூபன்
வண்ணத்துப்பூச்சி


சித்திரச் செவ்வானம்! சிறகுகளில் தானும்
ஒத்திகைகள் பார்த்து வரலாச்சு! _அது
    ஓவியமாய் பூத்திரியும் வண்ணத்துப் பூச்சி!

மஞ்சளிலே நீந்தும்! மங்கை நகச்சாந்தும்
எஞ்சியதில் பட்டுவிடலாச்சு! _அது
    ஏழுநிறமாய்த் திரியும் வண்ணத்துப்பூச்சி!

குங்குமத்தின் குலவை! கூட்டும் வண்ணக்கலவை!
அங்கமெல்லாம் கொட்டி வரலாச்சு! _ அது
Mohan Reuban's photo.   ஆகாயப் பூப்பறக்கும் வண்ணத்துப்பூச்சி!

ஓவியப்பூவொன்று ஓரிருநாள் சென்று
தாவிவந்து வான் பறக்கலாச்சு! _அது
   தான் மலரில் தேன்குடிக்கும் வண்ணத்துப்பூச்சி!
................
ஒரு பூவை பொட்டு வைத்த பொழுது

பிறை விட்டமானதை 
குறைபட்டுப் போனதை 
நிறைவட்டமாக்கினாள் மாது!_ அவள்
   நெற்றியில் பொட்டிடும் போது!

நெற்றியில் ஒருவிரல் 
ஒற்றிய பிறகவள்
சுற்றியதென்னடி மாயம்?_ அதில்
   சூரியன் தந்ததா சாயம்?

வண்ணத்துப் பொட்டாள்!
வானவில் தொட்டாள்!
எண்ணினேன் தினமொரு வண்ணம்!_நான்
   ஏழ்நிறம் காண்கிறேன் இன்னும்!

_மோகனரூபன்

Monday, 17 August 2015

மந்திரப் புன்னகை

மோனாலிசா 


குனித்த புருவமும், கொவ்வை செவ்வாயில் குமிழ்சிரிப்புமாக இருக்கும் உலகப்புகழ் பெற்ற ஓர் ஒவியம் மோனாலிசா ஓவியம்.
அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் முகத்தில் கடந்த 500 ஆண்டுகாலமாக இனம்புரியாத மர்மப் புன்னகை ஒன்று உதிராமல் ஒட்டிக் கொண்டு இருக்கிறது.
யார் அந்தப் பெண்? அந்த சிரிப்பின் மர்மம் என்ன என்பது இன்றுவரை யாருக்குமே புரியாத புதிர்.
ஓவியர் லியார்னோடோ டாவின்சி, இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்தபோது, பிரான்செஸ்கோ டி பர்த்தலோமியஸ் டி சானோபி டெல் ஜியாகோண்டா (?) என்ற பட்டுவணிகர் அவரைச் சந்தித்தார். தனது மூன்றாவது மனைவியான லிசா டி அன்டோனியோ மாரியார்டி நோல்டோ ஜெரார்டினியை (?) ஓவியமாக வரைந்து தரும்படி கேட்டார்.
ஜெரார்டினிக்கு அப்போது வயது 24. அவரை மாடலாக வைத்து ஓவியம் தீட்ட ஆரம்பித்தார் டாவின்சி. நான்கு ஆண்டுகள் கழித்து, அதாவது 1507ல் டாவின்சி பிரான்ஸ் நாட்டுக்குப் புறப்பட்டார்.

அப்போது மோனாலிசா ஓவியத்தை டாவின்சி, சில்க் வணிகரிடம் ஒப்படைக்க வில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம். ஒன்று அந்த ஓவியம் அப்போது முற்றுப் பெறாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது அந்த  ஓவியத்தின் மீது டாவின்சி காதல் கொண்ட காரணத்தால், அதைத் தர மனமில்லாமல் கையோடு எடுத்துக் கொண்டு பிரான்சுக்குப் போயிருக்க வேண்டும்.
1516ல் பிரான்ஸ் மன்னர் முதலாம் பிரான்சிஸின் அரசவை ஓவியராகச் சேர்ந்தார் டாவின்சி. அப்போது மோனாலிசா ஓவியத்தை மன்னர் விரும்பிக் கேட்டதால் அதை 4 ஆயிரம் தங்க நாணயங்களுக்கு அதை விற்றார். ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான தொகை அது அப்போது.
மோனாலிசா ஓவியத்தை மன்னர் முதலாம் பிரான்சிஸ் மாட்டி வைத்திருந்த இடம் அவரது கழிப்பறை.
காலங்கள் கடந்து நெப்போலியன் போனபார்ட் பிரான்ஸ் நாட்டின் மன்னரான போது மோனாலிசா ஓவியம் அவரது படுக்கையறையை அலங்கரித்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப்பிறகு இந்த ஓவியம் பாரிஸ் நகரத்தின் லூவர் அருங்காட்சியகத்தில் போய்ச் சேர்ந்தது.
மோனாலிசா ஓவியம் எத்தனைப் பேரை பாடாய்ப்படுத்தியிருக்கிறது தெரியுமா? 1800களின் நடுப்பகுதியில் வாழ்ந்த ஓவியர் லுக் மாஸ்பெரோ என்பவர், எனது தற்கொலைக்கு மோனாலிசா ஓவியமே காரணம் என்று எழுதி வைத்து விட்டு நான்காவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
1911ல் லூவர் அருங்காட்சியகத்தில், ஊழியராக வேலைபார்த்த இத்தாலிக்காரர் ஒருவர் சமயம் பார்த்து மோனாலிசா ஓவியத்தை அமுக்கிக் கொண்டு இத்தாலிக்கு ஓடிவிட்டார். அன்று பாரிஸ் நகரமே அழுது புலம்பியது. மக்கள் தெருக்களில் நின்று அழுது புலம்பினார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் திருடரிடம் இருந்து ஓவியம் மீட்கப்பட்டது. மோனாலிசா ஓவியம் இத்தாலி நாட்டின் சொத்து. அதனால்தான் திருடினேன் என்று அந்த ஓவியர் வியாக்கியானம் வேறு செய்தார். நல்லவேளை, ஓவியம் அவரிடம் இருந்தபோது எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
1956ல் பொலிவியா நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞர், மோனாலிசா ஓவியத்தின் மீது கல்லை விட்டெறிய, மோனாலிசாவின் முழங்கைப் பகுதி பாதிப்படைந்தது. அதன்பின் குண்டு துளைக்காத மூன்றடுக்கு கண்ணாடிகளின் பாதுகாப்பில், 55 சதவிகித ஈரப்பதத்துடன் பத்திரமாக இருக்கிறது மோனாலிசா ஓவியம்.
லியோன் மெகுசா என்ற  தொழிலதிபர், மோனாலிசா மீது கொண்ட காதலால் மோனாலிசாவைத் தினமும் பார்க்கும் ஆசையில், தனது நிறுவனத்தை வந்த விலைக்கு விற்றுவிட்டு லூவர் மியூசியத்தில் சம்பளம் இல்லாத காவல்காரராக வேலைக்குச் சேர்ந்து விட்டார். ஒப்புரான சத்தியமா நான் காவல்காரன் என்று மோனாலிசாவைத் தினமும் காவல் (காதல்) புரிந்து வருகிறார் அவர்.
பாரிஸ் நகரின் லூவர் மியூசியத்தில் மொத்தம் ஆறாயிரம் அரிய கலைப்பொருள்கள் இருந்தாலும், மக்கள் நிதமும் முண்டியடித்து கூட்டம் கூட்டமாக வந்துபார்ப்பது மோனாலிசா ஓவியத்தைத்தான்.
அந்த ஓவியத்தைப் பார்க்கும்போது காதுக்குள் ஒரு மர்மான இசை கேட்பதாகக் கூட வதந்தி உண்டு.
இப்போது மோனாலிசாவின் மோகனப்புன்னகைக்கு வருவோம்.